18

siruppiddy

மே 31, 2015

ஊடகவியலாளரைக் கைதுசெய்த பொலிசாருக்கு நீதிமன்றம் கண்டனம்!

யாழ்ப்பாண பத்திரிகை ஒன்றில் பிரசுரமான செய்தி தொடர்பில் கைது செய்யப்பட்ட பிராந்திய ஊடகவியலாளர் லோகதயாளன், பருத்தித்துறை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார். போதுமான குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக இல்லை என்றும், செய்தி
 ஒன்றுக்காக ஊடகவியலாளர் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டா? இல்லையா? என்பது தொடர்பில் கேள்வி எழுவதாகவும் தெரிவித்து பருத்தித்துறை நீதவான் மா.கணேசராஜா அவரை விடுதலை செய்தார்.
எவ்வாறாயினும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் பத்திரிகை ஒன்று தனது செய்திகளைப் பிரசுரிக்கின்ற பொழுது அவற்றின் உண்மைத் தன்மையை தீர ஆராய்ந்து பொறுப்புடன் பிரசுரிக்க வேண்டும் என்றும் தமது தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளார். நீதவான் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளதாவது,
சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள், ஆவணங்களை உற்று நோக்குகின்ற பொழுது குற்றம் என்ன என்பது குறித்து மன்றில் அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கம் அல்லது அறிக்கை தாக்கல் செய்வதற்கு போதுமான கால அவகாசத்தை மன்று பொலிஸாருக்கு வழங்கியிருந்தது.
இந்த வழக்கில் எந்தவிதமான குற்றச்சாட்டும் மன்றில் குறித்த ஊடகவியலாளருக்கு எதிராக முன்வைக்கப்படாத நிலையிலும் மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் பிரிவுகள் உரிய முறையில் பின்பற்றப்படாத நிலையிலும் இவ்வழக்கில் இவ் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டிருப்பது சட்டத்திற்கு விரோதமானதென்று மன்று தீர்மானிக்கின்றது.
மேலும் செய்தி ஒன்றுக்காக ஊடகவியலாளரை கைது செய்வதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் கேள்வியெழுகின்றது. ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டு இருப்பதானது உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்ட வரையறைகளை மீறுவதாகவே மன்று கருதுகின்றது.
மேலும் இவ்வாறான கைதுகள் சட்ட ஆட்சியை கேள்விக்குட்படுத்தும் என்ற காரணத்தினாலும் குறித்த எதிரிக்கெதிராக குற்றச்சாட்டு எதுவும் சுமத்தப்படாத காரணத்தினாலும் மன்று எதிரியை விடுதலை செய்கின்றது என்று நீதிவான் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மே 30, 2015

இராணுவ அதிகாரிகளிடம் போர்க்குற்றச்சாட்டுகள் விசாரணை!!!

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக இராணுவ உயரதிகாரிகளிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக அனைத்துலக மட்டத்தில் போர்க்குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளவரும், அண்மையில் அரசால் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸிடம் உள்ளக விசாரணைக்குழு வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் அதிகளவு மனித உரிமை மீறல்களைப் புரிந்த படைப்பிரிவுக்கு இவரே தலைமைதாங்கினார் என்ற குற்றச்சாட்டும் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், நந்தன உடவத்த, கமல் குணரத்தன ஆகிய உயர்மட்ட இராணுவ புள்ளிகளிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன என்று ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சுமார் 3 மணித்தியாலங்கள் நடத்தப்பட்ட விசாரணைகளில் முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன என அறியமுடிகின்றது. இவை குறித்த விவரங்கள் ஓகஸ்டில் வெளிவரும் இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படும் என அறியமுடிகின்றது.
காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மாத்திரம் ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட மெக்ஸ் வெல் பரணகம தலைமையிலான மூவரடங்கிய விசாரணைக்குழுவின் பணிகளை, உள்ளக போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்கும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல்மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஸ்தரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கமையவே படைத்தரப்பிடமும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு பரணகம குழு நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்படி குழுவின் முன்னால் சாட்சிமளித்துள்ள மக்களுள் அநேகமானோர் படையினருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள விடயப்பரப்பில் முதலாவது கட்டத்தில் காணாமல்போனோர் பற்றியும், இரண்டாவது விடயப்பரப்பில் போர்க்குற்றங்கள் பற்றி விசாரணை செய்யும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


மே 29, 2015

பிரதமர் வேட்பாளராகமஹிந்தவைப் நிறுத்த விடமாட்டேன்!

பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார் பில் போட்டியிடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்தராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்கவேண்டும் என்பது உட்பட நான்கு விடயங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியுடன் விரி வான பேச்சு நடத்தினர்.இதன் போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார்.
பிரதமர் வேட்பாளராக எதிர்வரும் பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்கவேண்டும். இதன் மூலமே கட்சியின் ஒற்றுமையினை கட்டிக்காக்க முடியும் என்று கூட்டுக்கட்சியின் தலைவர்கள் வலியுறுத்தினர். இதன் போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- 
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போட்டியிடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அவர் வெற்றி பெற்று பிரதமராக வந்த பின்னர் என்ன செய்வார் என்பது எனக்குத் தெரியும். திரும்பவும் அவர் ஜனாதிபதியாக முயல்வார்.
கட்சியின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதற்கு நான் தயாராக உள்ளேன். அடுத்த பொதுத்தேர்தலில் கட்சியினை வெற்றிபெறச் செய்வதற்கு 
மஹிந்த ராஜபக்ஷ பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அவருடன் இணைந்து பிரசாரத்தை மேற்கொண்டு கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்வதற்கு நான் தயாராக உள்ளேன். இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அனைத்து பங்காளிக் கட்சிகளையும் ஒன்றிணைத்து பலமான கூட்டணியாக களமிறங்குவது, தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவருவது, பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவருவது குறித்தும் 
ஆராயப்பட்டது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


மே 27, 2015

நடேசன் புலித்தேவன் உட்பட பலர் தேனீர் கொடுத்த பின்னர் சுட்டுக்கொலை

சரணடையச் சென்ற விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் உட்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3000 இற்கும் மேற்பட்ட அரசியல்துறை போராளிகளும் 25000 இற்கும் மேற்பட்ட பொதுமக்களும் சரணடையவுள்ளனர் என்ற செய்தி 
தெரியப்படுத்தப்பட்டு சர்வதேச நாடுகளின் அறிவுறுத்தலுடன் சரணடையவந்தவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தேனீர் வழங்கப்பட்டு இருக்க வைக்கப்பட்ட பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றிய அனைத்து 
விடயங்களும் ஐக்கிய நாடுகள் உட்பட முக்கியமான நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் தமிழத்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு தெரிவித்துள்ளார். இதன் பின்னர் இந்த சாட்சியாளரான நேரு எவ்வாறு அமெரிக்காவின் உதவியால் வெளிநாடு சென்றார் என்பது முதல் முழுமையான விபரங்கள் 
காணொளியில் இணைப்பு 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மே 23, 2015

இராணுவத்தை நுழைக்கும் சதி முறியடிப்பு???

மாணவி வித்தியா விவகாரத்தில் இராணுவத்தை நுழைக்கும் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் 
தெரிவித்துள்ளார்.
லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் போது இது தொடர்பான விடையங்களை இரா.சம்பந்தன் அவர்கள் 
தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் கீழ் சம்பூர் காணி விவகாரத்தில் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த அரசாங்கத்தின் போது இந்தப் பகுதியில் மீள்குடியேற்றங்களை மேற்கொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மே 22, 2015

ஆர்ப்பாட்டங்கள் தெற்கில் பிழையாக பிரசாரம் செய்யப்படுகிறது


யாழ்ப்பாணத்தில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் தெற்கில் பிழையான கருத்துகள் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் இந்த போராட்டங்கள் யாழ்ப்பாணத்தில்உள்ள சிங்கள மக்களுக்கு எதிராக நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
ஜாதி;க்க ஹெல உறுமய வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்கள் சிங்களவர்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதனை மறுத்துள்ளதுடன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டங்கள் மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராகவே முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன் போது இனரீதியான எந்தவிதமானகருத்துப் பிரயோகமும் இடம்பெற்றிருக்கவில்லை என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்
கூறியுள்ளார்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
 

மே 18, 2015

கவிஞர் ரதிமோகனின் எம் ஓலம்கேட்கிறதா

கொத்துக் குண்டுகளால்
கொத்துக்கொத்தாய்
கொன்று குவிக்கப்பட்டோம்
கொலை வெறியர்களின்
கோரப்பற்களால்
கிழித்தெறியப்பட்ட உடல்கள்
சிந்திய உதிரத்தில்
முல்லைமண் தோய்ந்திருக்க
நந்திக்கடலும் செங்கடலானது…
பிஞ்சுக்குழந்தைகள் எம்
நெஞ்சைக் கிழித்தன
பீறிட்டு வந்த
குண்டுகள்…
பதுங்குக்குழிக்குள்
பதுங்கிய எம்மை
பாய்ந்து வந்த செல்
எமக்கு புதைகுழி
அமைத்து சென்றது..
கத்தினோம் கதறினோம்
ஓலமிட்டோம் ஓடிவந்தோம்
காப்பாற்ற எவருமின்றியே
கதறியே உயிர் துறந்தோம்….
ஆசைகள் கனவுகள்
சுமந்த ஆத்மாக்களாய்
அலைகிறோம் திரிகிறோம்
அழுகிறோம் கேட்கிறதா
ஆக்கம்
கவிஞர் ரதிமோகன்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மே 16, 2015

ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு நீதிமன்றம் தடை!

தமிழ்தேசிய மக்கள் முன்னணி  இனால் முள்ளிவாய்க்காலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு கௌரவ முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடைவிதித்தது.
 18.05.2015ம் திகதி காலை 10 மணியளவில் இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இதை தடைவிதிக்க வேண்டும் என முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்ட விண்ணப்பத்தின் பிரகாரம் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மே 12, 2015

மோட்டார் சைக்கிள் வாங்கிய அரச ஊழியர்கள் அந்தரிப்பு!

மகிந்த ராஜபக்ஷவிடம் மோட்டார் சைக்கிள் வாங்கியவர்கள் வேலையை விட்டு விலகினாலே வேறு வேலைக்கு சென்றாலோ மோட்டார் சைக்கிளுக்கு உரிய சந்தை பெறுமதியை புதிய அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என திறைசேரி உத்தரவு இட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷ காலத்தில் அரச வெளிக்கள ஆண் , பெண் உத்தியோகஸ்தர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
அவ்வாறு மோட்டார் சைக்கிள்களை பெற்ற உத்தியோகஸ்தர்கள். வெளிக்கள உத்தியோகஸ்தர் பதவியில் இருந்து விலகினாலோ அல்லது வேறு வேலைக்கு மாற்றல் ஆகி சென்றாலோ மோட்டார் சைக்கிளுக்கு உரிய சந்தை பெறுமதியினை செலுத்த வேண்டும் என திறைசேரியின் திட்டமிடல் பிரிவால் மாவட்ட செயலகங்களுக்கு சுற்று நிரூபம் அனுப்பி வைக்கபப்ட்டுள்ளது.
ஆண்களுக்கான மோட்டார் சைக்கிள் 1 லட்சத்து 94ஆயிரத்து 920 ரூபாய் எனவும் பெண்களுக்கான 
மோட்டார் சைக்கிள் 1 லட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாய் எனவும் பதவி விலகி செல்பவர்கள் அல்லது வேலை மாற்றல் ஆகி செல்பவர்கள் முன்னர் செலுத்திய 50 ஆயிரம் ரூபாயினை தவிர்த்து மிகுதி பணத்தினை செலுத்த வேண்டும் என அந்த சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தற்போது யாழ்,மாவட்டத்தில் 
சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் வேலை மாற்றல் ஆகியும் தமது வெளிக்கள உத்தியோகஸ்தர் பதவியில் இருந்தும் மாற்றல் ஆகி உள்ளனர். அவர்கள் மோட்டார் சைக்கிளுக்கு உரிய முழு தொகையினையும் ஒரே தடவையில் செலுத்த முடியாது எனவும் தவணை முறையில் அதற்குரிய மிகுதி பணத்தினை செலுத்துவதாகவும் கோரி 
இருக்கின்றனர். தமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளதாகவும், மோட்டார் சைக்கிளுக்கு உரிய தொகையினை ஒரே தடவையில் செலுத்த கோரி இருப்பதனால் தாம் மிகுந்த பண நெருக்கடிக்குள் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட உத்தியோகஸ்தர்கள் கவலை 
தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மே 10, 2015

இன்னும் வடக்கிலும் கிழக்கிலும் 74 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடி


இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு உதவி வழங்கும் நாடுகளின் நிதியுதவி குறைக்கப்பட்டிருப்பதனால், அந்தப் பணிகளில் தாமதமும் சிக்கல்களும் ஏற்பட்டிருப்பதாக கண்ணிவெடி மற்றும் வெடிப்பொருட்கள் ஆய்வு மையத்தைச் சேர்ந்த வித்யா அபேகுணவர்தன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையை கண்ணிவெடிகள் அற்ற நாடாக மாற்றுவதற்கு 2020 ஆம் ஆண்டு வரையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.
எனினும் சர்வதேசத்தின் நிதியுதவிகள் குறைக்கப்பட்டுள்ள இப்போதைய நிலையில் குறித்த காலத்துக்குள் அந்த இலக்கை அடைவது கடினம் என்று வித்யா அபேகுணவர்தன கூறினார்.
கடந்த 2009, 2010 ஆம் ஆண்டுகளில் முகாம்களில் தஞ்சம் அடைந்திருந்த பெரும் எண்ணிக்கையிலான மக்களை மீள்குடியேற்ற வேண்டிய அவசர தேவை இருந்ததனால், உதவி வழங்கும் நாடுகள் பலவும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு அதிக அளவில் உதவிகளை வழங்கி வந்தன.
எனினும் இப்போது நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு, யுத்தத்தின் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் எற்பட்டிருப்பதனால், உதவி வழங்கும் நாடுகள் இலங்கைக்கான உதவிகளை குறைத்திருக்கின்றன என்று அபேகுணவர்தன தெரிவித்தார்.
நிதிப்பற்றாக்குறை காரணமாக இப்போது ஒருசில நிறுவனங்களே கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன. அத்துடன் இலங்கை இராணுவத்தினரும் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
கடந்த 2011 ஆம் ஆண்டில் 53 சதுர கிலோமீட்டர் பரப்பிலும், 2012 ஆம் ஆண்டு 22 சதுர கிலோ மீட்டர் பரப்பிலும், 2013 ஆம் ஆண்டு 8 சதுர கிலோ மீட்டர் பரப்பிலும், 2014 ஆம் ஆண்டு 5 சதுர கிலோ மீட்டர் பரப்பிலும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நடந்துள்ளன.
இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் 74 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகுதிகளில் இன்னும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நடைபெற வேண்டியுள்ளது.
இந்தப் பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகள் குறைவாகவும், வயல்கள் போன்ற நிலங்கள் அதிகமாகவும் காணப்படுகின்றன.
மீள்குடியேற்றம் செய்யப்படும் பகுதிகளில் கண்ணி வெடிகளும், வெடிக்காத குண்டுகளும் தொடர்ந்து கிடைத்துவருவது மக்களுக்கு அச்சத்தை அளிப்பதாக உள்ளது என, வித்யா அபேகுணவர்தன தெரிவித்தார்.   
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 
 

மே 08, 2015

தங்க தொகை சம்பந்தமான ஆவணங்கள் எரியூட்டப்பட்டுள்ளன

 விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணத்தை திறைசேரிக்கு வழங்கிய போது திறைசேரிக்கும் இராணுவத்திற்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்கள் ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தர் ஒருவரின் ஆலோசனையின்படி எரியூட்டப்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், இந்த கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான எந்த ஆவணங்களும் இராணுவத்திடம் இல்லை.
ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் விடுதலைப் புலிகளிடம் இருந்து எவ்வளவு தொகை பணம் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை வடக்கில் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணம் என்பன உரிய நடைமுறைகளின் அடிப்படையில் அரசாங்கத்திடம் ஒப்படைத்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் கூறியிருந்தார்.
புலிகளிடம் இருந்து கைப்பற்றிய தங்கம் மற்றும் பணம் என்பன சுமை ஊர்திகள் மற்றும் உழவு இயந்திரங்கள் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய தங்கத்தில் 310 டொன் தங்கத்தை ராஜபக்சவினர் இரகசியமான முறையில் ஜப்பானுக்கு விற்பனை செய்ததாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
இது சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்த போதிலும் பலமிக்க சக்தி ஒன்று தலையிட்டு அந்த விசாரணைகளை நிறுத்தியதாக திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இது குறித்து இராணுவ ஊடகப் பேச்சாளரிடம் கேட்டபோது மேற்படி விடயம் பற்றி எதனையும் தன்னால் கூற முடியாது எனவும் பாதுகாப்புச் செயலாளரிடம் அது பற்றி கேட்குமாறும் கூறியுள்ளார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மே 07, 2015

பற்றிக் பிரவுண் உரை இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே!

முள்ளிவாய்க்கால் துயரச்சம்பவம் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகப் போகின்ற நிலையில் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என கனடியப் பாராளுமன்றத்தில் பற்றிக் பிரவுண் (Patrick Brown) பதிவு செய்தார்.மே 2009ல் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் 
கொல்லப்பட்ட போது ஆயிரக்கணக்கான அவர்களின் உறவுகளுடன் கைகோர்த்து நின்றவன் என்ற வகையில் இதனைக் குறிப்பிடுகின்றேன் எனவும், அவர் தெரிவித்தார்
70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள்.இலங்கை அரசு இன்னமும் படுபாதகமான மனிதவுரிமை மீறல்கள் குறித்த எந்நதவொரு முன்னேற்றத்தையும் அடையவில்லை. கனடியத் தமிழர்கள் கனடாவின் கலாச்சார வரைபடத்தில் பல நல்ல மாறுதல்களை மேற்கொண்டுள்ளார்கள். அதுகுறித்து நான் பெருமையடைகின்றேன் எனவும் பற்றிக் பிரவுண் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மே 06, 2015

யுத்தக் கொடூரம் கடந்த முப்பது ஆண்டு???

இதயத்தைக் கருக்கும் மரணச் செய்திகள் இழப்புகளைத் தாங்கும் வல்லமையை இழந்து போனவர்கள் நாங்கள். அந்த அளவிற்கு யுத்தக் கொடூரம் கடந்த முப்பது ஆண்டுகளாக எங்களை வதம் செய்தது.
செல் வீச்சில் விமானக் குண்டு வீச்சில், இராணுவம் சுட்டதில் படகில் வந்தவர்களை கண்டபாட்டில் கடற்படையினர் வெட்டியதில் காடையர்கள் எரியூட்டியதில் தமிழர்கள் பலி என்ற செய்திகளையே மிக நீண்டகாலமாக நாம் அனுபவித்து வந்தோம்.
இது தவிர, இனம் தெரியாத சூட்டுச் சம்பவங்களும் கடத்தல் நாடகங்களும் தமிழர்களின் இதயங்களைக் கருக்கி கருவாடாக்கியது. இந்த வேதனைக்கு எல்லாம் குறியீடு வைப்பது போல, வன்னிப் பெருநிலப் பரப்பில் நடந்த நெட்டூரம் அமைந்து போயிற்று.
இப்படியாக இழப்புக்களையும் அது பற்றிய செய்திகளையும் கேட்டுக் கேட்டு வெறுத்துப் போன எமக்கு போருக்குப் பின்பான காலமாவது ஆறுதலைத் தரும் என்றால், அந்தோ கொடுமை! மின்சாரம் தாக்கியதில் தந்தையும் மகனும் துடிதுடித்துப் பலி, வாகன விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு, நீரில் மூழ்கி இளைஞர் பலி, தாய் மரணம், புகையிரத வண்டி மோதி நால்வர் சாவு என்ற அவலச் செய்திகள் வந்த வண்ணமே உள்ளன.
இந்தச் செய்திகளைப் பார்க்கும் போதெல்லாம் இறைவா! ஏன்? இப்படி. யுத்தத்தால் அழிந்தோம். இப்போது வாகன விபத்தால், மின்தாக்கத்தால் கடவுளே! எங்களைக் காப்பாற்று என்று ஏங்கி அழுவதைத் தவிர வேறு எந்த வழியும் தெரிவதாக இல்லை.
இவை ஒரு புறம் நடக்கும் அதேவேளை, வாள்வெட்டுக் கலாசாரமும் எங்கள் இயல்பு வாழ்வுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகி வருவது கண்டு வேதனைப்படாமல் எங்ஙனம் இருக்க முடியும்?
ஒட்டுமொத்தத்தில் எங்கள் வடபகுதி மண்ணில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் எங்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருப்பதைக் காணமுடிகின்றது. இவற்றில் இருந்து எங்கள் இனத்தை மீட்டு எடுக்க வேண்டும் என்பது கட்டாயமானதாயினும் இதனைச் செய்வது யார்? என்ற கேள்வி எழும்.
வடக்கில் தமிழர் அரசு உள்ளது என்று சொல்வதைத் தவிர, வேறு எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் அந்த அரசால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
மாறாக தமிழ் அரசியல் தலைமைகள் மீதாவது நம்பிக்கை வைக்கலாம் என்றால், அங்கு நடக்கின்ற திருகுதாளங்களை நினைக்கும் போது, தமிழ் இனம் நிம்மதியாக வாழ்வதற்கான எந்த அறிகுறிகளும் அடையாளங்களும் தெரியவில்லை.
சுருங்கக்கூறின் தமிழ் அரசியல் தலைமைகள் தங்களின் பதவிகளைத் தக்க வைப்பதற்காக தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய திட்டங்களுக்கும் இனவாத சாயம்பூசி அத்திட்டங்களைக் கந்தறுக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதைக் காணமுடிகிறது.
தங்கள் குடும்பங்களை வெளிநாடுகளில் இருத்தி விட்டு, இங்கு வந்து, இங்கிருக்கும் மக்களைக் குழப்பி தங்கள் இருப்பை நிலை
 நிறுத்துவதில் இவர்கள் காட்டும் அக்கறையை நினைக்கும் போது நெஞ்சம் வெடிக்கும்.
போரினால் அவலப்பட்ட தமிழ் மக்கள் இப்போது விபத்துகளாலும் கலாசார பிறழ்வுகளாலும் பல்வேறு அவலங்களை சந்தித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்நியன் படத்தில் வருகின்ற ஒரு காட்சிக்கு ஒப்பானதாக இருப்பதைக் காணமுடிகிறது.
இத்தகைய துன்பங்கள் களையப்பட வேண்டும். இதற்காக ஒரு சமூகப் பாதுகாப்புத் தளம் கட்டி எழுப்பப்படுவது அவசியம்.
இது விடயத்தில் தமிழ் அரசியல் தலைமையும் அரச நிர்வாகிகளும் இணைந்து செயற்பட வேண்டும். இவற்றை விட்டு தேவையற்ற விடயங்களை கதைத்தால் அவலமான செய்திகளை தமிழ் இனம் கேட்கின்ற, அனுபவிக்கின்ற துன்பம் தொடரவே செய்யும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>மே 04, 2015

ஜோன் கெரியின் நிலைப்பாடு சொல்ஹெய்ம் வரவேற்பு

 ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, கேட்டுக் கொண்டதற்கு, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக். சொல்ஹெய்ம்,
 வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கச் செயலர், கொழும்பில் உரையாற்றிய போது, ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து டுவிட்டரில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ள, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்,
“ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா  ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், எஞ்சியுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், ஜோன் கெரி கேட்டுக் கொண்டுள்ளார். நல்லது! ” என்று குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டாலே 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு!

 வடக்கில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படாது என்று உறுயளிக்கப்பட்டால் மாத்திரமே 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளிக்க முடியம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வைத்து கூறியுள்ளார்.
கடந்த தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் இருந்து 9 பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினர்.
ஆனால் இந்த முறை அந்த எண்ணிக்கை 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்தல் சீர்த்திருத்தத்தின் மூலம் வடமாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும் நிலைமை இருக்கிறது.
வடக்கில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்துள்ளமையால் அங்கிருந்து தெரிவாகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பது நியாயமற்றது.
தமிழ் நாட்டில் இன்னும் 100,000 பேர் அகதிகளாக உள்ளனர்.
இந்த நிலையில் வடக்கின் நாடாளுமன்ற ஆசனங்களில் கைவக்கப்படாது என்று உறுதியளித்தால் மாத்திரமே 20ம் திருத்தச் சட்டமாக தேர்தல் திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மே 02, 2015

கைதிகளை விடுவிக்கும் அமைச்சரவை பத்திரம் விரைவில்!


அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்று விரைவில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் நீதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் குறித்து வகைபிரிக்கப்பட்ட பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் எத்தனை கைதிகள் இருக்கின்றவர்கள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என்னென்ன?, போலியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்கள், தண்டனைக்காலம் நிறைவடைந்தவர்கள் உள்ளிட்ட பல தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் அவர்களை விடுவிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டு கட்டம் கட்டமாக அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

 

மே 01, 2015

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எதிராக முறைப்பாடு.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டார நாயக்க குமா­ர­துங்­கவின் ஆட்சிக் காலத்தில் இடம்­பெற்­றுள்ளதாக கூறப்படும் மோசடி ஒன்று தொடர்பில் உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்ட விசா­ர­ணையை துரி­தப்­ப­டுத்­து­மாறு பாரா­ளு­மன்ற உறுப்­பினர்களான வாசு­தேவ நாண­யக்­கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழு மற்றும் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் வாசுதேவநாணயக்கார குறிப்பிடு கையில்;
முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க உள்­ளிட்ட தரப்­பினர் ஜோன் கீல்ஸ் நிறு­வ­னத்­துக்கு கொழும்பு துறை­மு­கத்தின் 10 ஏக்கர் நிலப்­ப­ரப்பை கப்­பல்­க­ளுக்கு எரி­பொருள்
 விநி­யோ­கிக்க வழங்­கி­யிருந்தனர். இவ்­வாறு தனி­யா­ருக்கு வழங்­கிய முறைமை தவ­றா­னது உயர் நீதி­மன்றம் தீர்­ப்ப­ளித்தும் அந்த விடயம் தொடர்பில் சட்ட மா அதிபர், குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர், இலஞ்ச ஊழல் ஆணைக் குழு எவ்­வித நடவ்­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ள வில்­லை.
அது­கு­றித்த விச­ர­ணைகள் எந்­த­ளவில்
 இடம்­பெற்­ரு­வ­ரு­கின்­றன என்­பதை தெரிந்­து­கொள்­ளவே இந்த முறைப்­பாட்­டினை செய்­தோம்.2007 ஆம் ஆண்டு உயர் நீதி­மன்­றத்­தினால் வழங்­கப்­பட்­டுள்ள தீர்ப்­புக்கு அமைய அக் காலப் பகு­தியில் இடம்­பெற்ற குறித்த மோசடி தொடர்பில் ஆணைக்­குழு விசா­ர­ணையை முன்­னெ­டுக்­க­வில்­லை­. எனவே விசா­ர­ணையை துரி­தப்­ப­டுத்­து­மாறு கோரி முறைப்­பாட்டை பதிவு செய்தோம் . இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>