18

siruppiddy

டிசம்பர் 27, 2018

விடுதலைப் புலிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது தமிழீழ விடுதலை புலிகளுடன் தமிழ் அரசியல் தலைமைகள் செய்து கொண்ட உடன்படிக்கை ஊடானது’ என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.சயந்தன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை 
குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ‘தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படுவதுக்கு முன்னரான நிகழ்வுகளை தொடர்ச்சியாக பார்த்தால் ஜனநாயக ரீதியான தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.அந்த வரிசையில் இறுதியாக உயிரிழந்தவர் கலாநிதி நீலன் திருச்செல்வம்
. அதற்கு முன்னர் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை.
அதற்கு முன்னர் யாழ்.மாநகர சபை முதல்வர் சிவபாலன். அதற்கு முன்னர் சரோஜினி யோகேஸ்வரன் என தொடர்ச்சியாக கொல்லப்பட்டார்கள்.அதனால், தேர்தலில் போட்டியிட்டு கொல்லப்படாமல் இருக்க வேண்டும் எனில் விடுதலைப்புலிகளுடன் உடன்படிக்கைக்கு போக வேண்டிய தேவை ஏற்பட்டது.
அந்நிலையில், எல்லா கட்சிகளையும் சேர்த்து ஜனநாயக குரலாக இருப்போம் எனும் உத்தரவாதம் அளிக்க வேண்டி இருந்தது. அதேபோன்
று புலிகளுக்கும் ஒரு தேவை இருந்தது.தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு இருந்தார்கள். அதனை சர்வதேசம் ஏற்க தயாராக இருக்கவில்லை. அதனால் புலிகளுக்கு மக்களிடம் ஒரு ஆணை பெற வேண்டிய தேவை ஏற்பட்டது.
அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என அங்கீகரிக்க வேண்டும் என கோரி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.அதன் பின்னரே விடுதலைப்புலிகளை சர்வதேச 
சமூகம் அங்கீகரித்தது.
கட்சிகளுக்குள் தாங்கள் எவ்வாறு செய்யப்பட வேண்டும், எவ்வாறு இயங்க வேண்டும், அதன் இயங்கு தளம் என்ன? அதன் செல்நெறி பற்றிய எந்த உடன்பாடும் அங்கு இருக்கவில்லை’ எனவும் 
அவர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


டிசம்பர் 22, 2018

தடம் பதிக்கும் தமிழர் தலைநகரில் அமெரிக்க இராணுவம்

இலங்கையில் அமெரிக்காவின் இராணுவ முகாமினை நிர்மாணிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.திருகோணமலையில்
 நிர்மாணிக்கப்படவுள்ள இந்த முகாமினை, அமெரிக்க இராணுவ முகாமில் கடற்படை தளவாட மத்திய நிலையமாக பயன்படுத்த அமெரிக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்க கடற்படையின் தகவல் தொடர்பு அதிகாரி கிராண்ட் கிரேஸ் என்பவரை அடிப்படையாக கொண்டு இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இராணுவ முகாமினை 
அமைக்கும் முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள கடந்த ஒகஸ்ட் மாதம் என்கரோஜ் என்ற அமெரிக்க கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்ததாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையத்தின் ஊடாக இந்திய கடல் எல்லையில் நிறுத்தப்படும் அமெரிக்க கப்பல்களுக்கு தேவையான சேவை வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.எனினும், இவ்வாறான
 நிலையம் ஒன்று ஒரு போதும் இந்திய எல்லையில் இதற்கு முன்னர் நிர்மாணிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


டிசம்பர் 03, 2018

களுவாஞ்சிக்குடியில் யுவதியை கடத்திய இளைஞர் குழு

விரதம் அனுஷ்டிப்பதற்காக ஆலயத்திற்கு வருகை தந்திருந்த யுவதி, இளைஞர் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டபோது துரிதமாகச் செயற்பட்ட பொதுமக்கள் யுவதியை கடத்தல் குழுவிடமிருந்து மீட்டதோடு சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களான இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் நேற்று இடம்பெற்ற இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,
தன்னைக் காப்பாற்றுமாறு அவலக் குரலெழுப்பிய நிலையில் இளம்பெண்ணொருவர் முச்சக்கரவண்டியில் கொண்டு செல்லப்படுவதை அவதானித்த பொதுமக்கள் விரைந்து செயற்பட்டு
 முச்சக்கரவண்டியைப் பின்தொடர்ந்து சென்று களுதாவளை பிரதேச சபைக்கு சமீபமாக முச்சக்கர வண்டியை வழிமறித்துள்ளனர்.
அவ்வேளையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றவரும் மற்றைய இளைஞர்கள் இருவரும் தப்பிச் செல்ல 
முயன்றுள்ளனர்.
எனினும் பொதுமக்கள் சாதுரியமாகச் செயற்பட்டு யுவதியை மீட்டதோடு சந்தேக நபர்களான இளைஞர்கள் மூவரையும் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடத்தப்பட்ட யுவதி போரதீவைச் சேர்ந்தவர் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காதல் விவகாரமே இந்தக் கடத்தலுக்குக் காரணம் என்பது ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து புலப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம்பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


மைத்திரி நாட்டிலுள்ள பரபரப்பின் மத்தியில் பசிலைச் சந்தித்தார்

சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இளைய சகோதரர் பசில் ராஜபக்‌ஷவும் நேற்றிரவு சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்
 வெளியாகியுள்ளது.
நாட்டில் தொடரும் அரசியல் இழுபறி நிலைகளுக்கு மத்தியிலேயே இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது
பசில் ராஜபக்‌ஷ, நல்லாட்சி அரசாங்க காலத்துக்கு
 முந்திய அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர் என்பதுடன் நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஊழல் விசாரணைகள் பலவற்றுக்கு சென்றுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


பொலிஸ் அதிகாரி அதிரடஎன் தந்தை தமிழன் என்பதில் எனக்குப் பெருமை

குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த டி சில்வா தனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன் என தெரி­வித்­துள்ளார். மஹிந்த ராஜ­பக்ஷவின் பொது­ஜன
 பெர­முன கட்­சியின் உறுப்­பினரான ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிர­சன்ன இவ­ரது பூர்­வீகம் தொடர்பில் கேள்வி எழுப்பும் வகையில் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். அதற்கு பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே நிஷாந்த டி சில்வா இவ்வாறு குறிப்­பிட்­டுள்ளார்.
நிஷாந்த டி சில்வா தொடர்ந்தும் தெரிவிக்கையில், நான் மனிதத் தன்­மையை மதிக்­கி­ன்றேன் ஒரு­வரின் இனத்தை அல்ல எனத் தெரிவித்ததோடு, எனது கட­மையின் போது கட்சி, நிற, இன, மத பேதங்கள் இல்லை. அனைவரும் மனி­தர்கள் என்ற அடிப்­ப­டை­யி­லேயே நான் சேவை செய்­கின்றேன்.
அத்துடன் “எனது தந்தை, எனது தாத்தா என
 எனது பரம்­ப­ரையே இந்த நாட்டில் வாழ்ந்து இந்த நாட்­டிற்­காக சேவை செய்­த­வர்­க­ளாவர். அவர்கள் அனைவரையும் நினைத்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன். எனவும் தெரிவித்துள்ளார். மேலும் எனது கடமை தொடர்பில் பலர் கோப­ம­டை­கின்­றார்கள். அது குறித்து நான் எதுவிதமான் ஐயமும் கொள்ளவில்லை” எனவும் நிஷாந்த டி சில்வா மேலும்
 குறிப்பிட்டுள்ளார்.
எனது பிறப்பு சான்­றி­தழில் எனக்கு சிங்­க­ளவர் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனினும் நான் மனித இனத்­திற்கே உரி­மை­யா­கின்றேன். சிங்­களம், தமிழ், முஸ்­லி­மாக இருப்­ப­தற்கு முன்னர்
 அனை­வரும் மனி­த­னாக 
இருப்போம். அத்­துடன் நான் ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் மன­ச்சாட்­சிக்கு
 உண்­மை­யா­கவும், நாட்டின் சட்­டத்­திற்­க­மை­யவும் செயற்­ப­டு­கிறேன். இனி­மேலும் அப்­படித் தான் செயற்­ப­டுவேன். எனத் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 28, 2018

முப்படைகளின் பிர­தானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சற்று முன்னர் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.11 மாணவர்கள் கடத்தல் விவகாரத்தில் பிர­தான 
சந்­தேகநபர் நேவி சம்­பத்­துக்கு அடைக்­கலம் கொடுத்தமை தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள ரவீந்திர விஜேகுணரத்னவை நேற்று காலை 10.00 மணிக்கு சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசா­ரணைப் பிரிவில் அவரை ஆஜ­ரா­கு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டிருந்தது.
எனினும், எனக்கு எந்த உத்­தி­யோ­கபூர்வ
 அறி­வித்­தலும் கிடைக்கவில்லை.எனினும் இன்று நீதிமன்றில் ஆஜராகத் தயார் என தெரிவித்திருந்தார். அதன்படி அவர் இன்று நீதிமன்றில் ஆஜரானார்.நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் சற்று முன்னர் ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


நவம்பர் 27, 2018

கிளிநொச்சி பத்து வருடங்களின் பின்பு இன்று ஏற்பட்ட பாரிய மாற்றம்

 இறுதி யுத்தத்தின் பின்னராக பத்து வருடங்களின் (2009)  பின் கிளிநொச்சி டிப்போ சந்தியில் மாவீரர் வளைவு நாட்டி நிமிர்த்தப்பட்டுள்ளது.ஏ-9 வீதியில் நாட்டப்பட்டுள்ள குறித்த வளைவினை 
தென்னிலங்கை பயணிகளும் பிரமிப்புடன் பார்த்துச்செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.இதனிடையே யாழ்.முன்னணி பாடசாலைகள் சிலவற்றின் முன்னதாகவும்
 இன்று மாவீரர் தின அலங்காரங்கள்,பதாதைகள் கட்டி வைக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது
.இதனிடையே பெரும்பாலான பாடசாலைகளில் இன்று காலை மாவீரர்களிற்கான மாணவர்களின் வணக்கம் செலுத்தப்பட்டு கற்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



நவம்பர் 15, 2018

அதிரடிப் படையினரால் யாழில் வெடிமருந்துகள் மீட்பு

யாழ். குருநகர், இறங்குதுறையில் இருந்து ரி.என்.ரி மற்றும் சி4 வகை வெடிமருந்துகள் விசேட அதிரடிப் படையினரால்
 மீட்கப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப் படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு குருநகர் இறங்குதுறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த வலைக்குள் இருந்து ரி.என்.ரி. மற்றும் சி4 வகை 2 கிலோ 196 கிராம் நிறையுடைய வெடிமருந்துகள் 
கைப்பற்றப்பட்டுள்ளன.
வெடிமருந்துகள் தொடர்பாக விசேட அதிரடிப் படையினர் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றதுடன், மீட்கப்பட்ட வெடிமருந்தினை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் குறித்த வெடிமருந்தினை யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ். நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அக்டோபர் 31, 2018

காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் சிப்பாயின் சடலம்

யாழ். காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் 
கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடற்படை முகாமின் ஆயுத களஞ்சிய நுழைவாசலுக்கு அருகில் இருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த 19 வயதுடைய அபயரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சிப்பாய் தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்ந்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் 
ஒப்படைக்கப்பட்டுள்ள
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


அக்டோபர் 27, 2018

நாளைபுதிய அமைச்சரவை பதவியேற்கலாம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர்களாக
 நியமிக்கப்படுவோரின் 
பட்டியலை குறித்து ஜனாதிபதியும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் கலந்துரையாடி தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.
நாளைய தினம் பதவியேற்கும் அமைச்சரவை 30 அமைச்சர்களை கொண்டிருக்கும் எனவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


அக்டோபர் 08, 2018

தலைவரின் தாயாரினை இறுதி வரை பராமரித்த வைத்திய அதிகாரி இயற்கை எய்தியுள்ளார்

விடுதலைப் புலிகளின் தலைவரின் தாயாரை இறுதி வரை பராமரித்து வந்த வைத்திய அதிகாரி மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் இயற்கை எய்தியுள்ளார்.வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட மருத்துவர் மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் (ஓய்வுபெற்ற மாவட்ட வைத்திய அதிகாரி) இன்று காலை இயற்கையெய்தியிருந்தார்.
சிறந்த வைத்திய நிபுணரான, அவர் இலங்கை இந்திய இராணுவ காலப்பகுதியில் வடமராட்சி பிரதேச மக்களுக்கு தன்னை அர்ப்பணித்து சேவையாற்றிய சேவையாளராவார்.விடுதலைப்புலிகளின் தலைவரின் நன்மதிப்பினை பெறறிருந்த மருத்துவர் மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை நேசித்து ஆத்மாக்களில் ஒருவரென்பது குறிப்பிடத்தக்கது.
அமரர் வேலுப்பிள்ளை இலங்கை இராணுவ தடுப்பு முகாமில் மரணமடைந்திருந்த நிலையில் அநாதரவாகியிருந்த பார்வதியம்மாளை அழைத்து வந்து தனது வைத்தியசாலையில் மரணம் வரை மருத்துவர் மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் பராமரித்து மருத்துவ சேவைகளையும் வழங்கியிமிருந்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செப்டம்பர் 05, 2018

மக்களின் பேருந்தும் மீது மஹிந்தவுக்காக படையெடுத்து வந்து தாக்குதல்!!

மக்களை ஏற்றி வந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பதுளை பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இலக்கத்
 தகடுகள் அற்ற கனரக வாகனம் ஒன்றில் வந்தவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.குறித்த பேருந்தில் நாடாளுமன்ற 
உறுப்பினர் டிலான் பெரேராவின் ஆதரவாளர்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, கொழும்பு – கடவத்தை பிரதேசத்தில் 
பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான கூட்டு எதிரணி இன்று கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை
 நடத்த உள்ளனர்.
கொழும்புக்கு வரும் அனைத்து வீதிகளையும் முடக்கும் வகையில், கொழும்பை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செப்டம்பர் 04, 2018

மண்கும்பாண் பகுதியில் நான்கு மோட்டார் குண்டுகள் மண்ணுக்குள் மீட்பு

யாழ்ப்பாணம் மண்கும்பாண் பகுதியில் அரச காணி ஒன்றில் நான்கு மோட்டார் குண்டுகள் மண்ணுக்குள் புதைந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மக்களால் ஊர்காவற்துறை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்து அடுத்து சிறப்பு அதிரடிப்படை உதவியுடன் குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கை இடம்பெற்று
 வருகின்றது
நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஆகஸ்ட் 11, 2018

மட்டக்களப்பு மாநகரசபைக்கு யாழ் மாநகர முதல்வர் விஜயம்

யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட் மட்டக்களப்பு மாநகரசபைக்கு  (10.08.2018) விஜயம் மேற்கொண்டதுடன் மாநகரசபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடலும் மேற்கொண்டிருந்தார்.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் எனப் பலரும் கலந்து 
கொண்டிருந்தனர்.
இதன் போது மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள், அமைவுகள், மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், யாழ் மாநகரசைபயின் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 09, 2018

நாட்டில் முடங்கிப் போன ரயில் சேவைகள் களத்தில் இறங்கிய ராணுவம்

ரயில்வே ஊழியர்களின் பணிப் பகிஸ்கரிப்பை முன்னிட்டு ரயில் பயணிகளுக்கு அமைச்சர் மங்கள சமரவீர மகிழ்ச்சியான செய்தியை 
அந்த வகையில் ரயில்வே ஊழியர்களின் பணிப் 
பகிஷ்கரிப்பு நிறைவடையும் வரையில் ரயில் பயணிகள், தங்களது பயணச்சீட்டை அல்லது பருவச் சீட்டை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில்
 இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.
ரயில்வே ஊழியர்கள் நேற்று பிற்பகல் திடீரென வேலை நிறுத்தத்தை மேற்கொண்டதன் காரணமாக இலங்கை முழுவதும் பாரிய நெருக்கடி ஏற்பட்டது.பல ரயில் நிலையங்களில் மோதல்களும், 
போராட்டங்களும் ஏற்பட்டன.
இதைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்ட இடங்களில் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டிருந்தனர்.மேலும், ஓய்வு பெற்றுள்ள புகையிரத சாரதிகளை இன்று காலை பணிக்கு வருமாறு புகையிரத பொதுமுகாமையாளர் அழைப்பு விடுத்திருந்தார்.
அத்துடன், கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மாணவர்களின் நன்மை கருதி விசேட பஸ் போக்குவரத்து சேவைகள் நடத்தப்படவுள்ளன. இதனை இராணும் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், அனைத்து அரச பேருந்து பணியாளர்களது விடுமுறைகளும் இரத்துச்
 செய்யப்பட்டுள்ளன.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஜூலை 13, 2018

ஆளுநர் அலுவலகம் முன்பாக அமர்ந்து போராடும் ஆசிரியை!!

யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாகப் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆளுநரைச் சந்திப்பதற்கு அனுமதி கோரிய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் வாசலில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.ஆசிரியராகக் கடமையாற்றிய குறித்த பெண், தனக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவையை பெற்றுத் தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஜூலை 11, 2018

மீன்பிடி படகுகள் அனைத்தையும் பதிவு செய்யும் நடவடிக்கை

வடக்கு கடற்பரப்பில் இடம்பெறுகின்ற சட்டவிரோத கடத்தல்களை தடுக்கும் வகையில் மீன்பிடி படகுகள் அனைத்தையும் பதிவு செய்யும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.
யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடல்களினூடாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையிலும் இதுவரை பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரிகள் இணைந்ததாக கடற்றொழில் நீரியல்வளத்துறையின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் கூறினார்.
இந்தக் குழுவினர் இரண்டு வாரங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து மீன்பிடிப் படகுகளை பதிவு செய்யவுள்ளனர்.
இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலங்கை கடற்படையினர் வடக்கு கடற்பரப்பில் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின்போது ஆயிரத்து 55 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல்
 செய்யப்பட்டது.
இதனைத் தவிர ஹெரொய்ன், ஐஸ், ஹஷிஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பேருந்தில் சென்ற மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவ வீரர் கைது

வவுனியாவிலிருந்து பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம் சென்ற இ.போ.ச பேருந்தில் பாடசாலைச்சீருடையுடன் சென்ற பாடசாலை மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவச்சிப்பாயை 
பொலிஸ் நிலையத்தில் மறைத்து வைத்துள்ளதாகத் தெரிவித்து பொதுமக்களும் பேருந்தில் சென்ற பயணிகளும் பொலிஸ் நிலையத்தைச்சுற்றிவளைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று பிற்பகல் 4மணியளவில் பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம் சென்ற இ.போ.ச பேருந்தில் பாடசாலைச்சீருடையுடன் மாணவி ஒருவர் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது பேருந்தில்
 பயணம் மேற்கொண்ட இராணுவ வீரர் ஒருவர் குறித்த மாணவியை அணுகி தொலைபேசி இலக்கத்தினை கேட்டதுடன் தொல்லைகளும் கொடுத்துள்ளார். இதை அவதானித்த பயணி ஒருவர் குருமன்காட்டிலுள்ள 
பொலிஸ் காவல் அரணில் பேருந்தை நிறுத்துமாறு சாரதியிடம் தெரிவித்துள்ளார். பேருந்தை நிறுத்தியதும் இராணுவச்சிப்பாய் பேருந்திலிருந்து
 இறங்கி தப்பி ஓடியபோது பேருந்தின் நடத்துனர் துரத்திச் சென்று பிடித்து காவலரணிலுள்ள பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் அவரை பொலிசார் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்களால் 
அப்பகுதி சற்று பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது 30 நிமிடங்கள் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வவுனியா 
பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று போக்குவரத்து நெரிசலை சரிப்படுத்தியதுடன் பயணிகளுடன் குறித்த பேருந்தை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
பொலிஸ் நிலையத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் பாடசாலைச்சீருடையுடன் சென்ற மாணவிக்கு தொல்லை கொடுத்த
 இராணுவச்சிப்பாயை கைது செய்யுமாறு பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்துள்ளனர். இதனால் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் தலைமை பொலிஸ் 
நிலையப் பொறுப்பதிகாரி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதுடன் குறித்த இராணுவ வீரரைக் கைது செய்துள்ளதாகவும் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார். பேருந்து விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஜூன் 20, 2018

அறிவியல்நகரில் புதையலை தேடியவர் பொலிஸாரால் கைது

.
கிளிநொச்சி, அறிவியல்நகர் பகுதியில் நவீன உபகரணமொன்றின் உதவியுடன் விடுதலை புலிகளின் புதையல் தேடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த பகுதி நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சுற்றிவளைக்கப்பட்டு, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவீன ரக ஸ்கேனர் உபகரணத்தை பயன்படுத்தி குறித்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஸ்கேனரின் மதிப்பு 58 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவரில் ஒருவர் தப்பிச் சென்ற நிலையில், ஒருவர் அதிரடிப் படையினரிடம் சிக்கியுள்ளார். அத்துடன் தேடுதல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கேனர் இயந்திரத்தையும் அதிரடிப்படையினர்
 கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவரும், ஸ்கேனர் இயந்திரமும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக 
தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர் பூநகரி நல்லூர் பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்னர் குறித்த பகுதியில் விடுதலைபுலிகளினால் புதைக்கப்பட்ட கொள்கலன் தொடர்பில் பொலிஸாரால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஜூன் 16, 2018

ராஜீவ் காந்தி கொலையின் தலைவர்.இத்தாலியில் உயிருடன்

ராஜீவ் காந்தி கொலையின் தலைமை சதிகாரர் இத்தாலியில் இருப்பதாக பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சொல்வது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையா? அல்லது புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டம்மானையா? என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதனை வரவேற்று சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் ஒன்றை போட்டிருக்கிறார்.
இந்த ட்வீட் பதிவின் முடிவில், தலைமை சதிகாரர் இத்தாலியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ராஜீவ் கொலை வழக்கில் முக்கிய சதிகாரர்கள் எனக் குறிப்பிடப்படுவது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மான்
 இருவரும் தான்.
இலங்கையில் யுத்தம் 2009-ல் முடிவுக்கு வந்த போது விடுதலைப் புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் யாருமே இல்லை எனவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது சுப்பிரமணியன் சுவாமி, முக்கிய சதிகாரர் இத்தாலியில் இருப்பதாக கூறியுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிடுவது பிரபாகரனையா? பொட்டம்மானையா? என்பதுதான் சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகிற கேள்வி.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மே 21, 2018

வவுனியாவில் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எரிபொருட்களின் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக எதிர்வரும் 23 ஆம் திகதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது
சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் மேற்கொள்ளப்படவுள்ள இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மக்களை பசியில் தள்ளும் அரசுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவும்,
 மக்கள் அதிகாரங்களை நிலை நிறுத்த அனைத்து மக்களையும் இன, மத, பேதமின்றி இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிணையுமாறு சமூக வழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மே 18, 2018

முள்ளிவாய்க்கால் நோக்கி யாழ் பல்கலை மாணவர் உந்துருளிப் பேரணி

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை எழுச்சி மிக்கதாக்கும் வகையில்
 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நோக்கிய உந்துருளிப் பேரணி சற்று முன்னர் யாழ்ப்பாணத்தி லிருந்து புறப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் இருந்து ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் உந்துருகளோடு கலந்து கொண்டனர். ஏனைய பல மாணவர்களும், பொதுமக்களும் பஸ்களில் முள்ளிவாய்க்கால் நோக்கிப் 
பயணமாகியுள்ளனர்.
இன்று காலை 11 மணிக்கு முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள பொது நிகழ்வில் இந்தப் பேரணி கலந்து கொள்ளும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



மே 17, 2018

உறவுகளுக்கு உணர்வூட்டி துளிர் பெறும் மே 18: கண்ணீரை காணிக்கையாக்கிய நாள்

மே 18 ஆம் திகதி உயிரிழந்த ஆத்மாக்களுக்கு உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு நாளை அனுஷ்டிக்கப்பட இருக்கும் நிலையில், கண்ணீரை காணிக்கையாக்கி உயிரிழந்த உறவுகளின் ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் துயரமான
 நாள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் உன்னத உறவுகள் சார்பாக தெரிவித்திருக்கும் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் போராட்ட குணமும் கூடவே உணர்வுகளையும் வெளிப்படுத்துபவர்களாக,
 ஒருமித்த உணர்வோடு உணர்வுகளுக்கு மதிப்பளித்து உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமெனவும், 
உரிமைக்காக பிரதிநிதித்துவம் பெற்றுக்கொண்டவர்கள் மீது உறவுகளின் உணர்வலைகள் மீது தான் சார்ந்த நலன் வெளிப்பாடுகளை தூய ஆத்மாக்களின் அஞ்சலி நிகழ்வில் வெளிப்படுத்த இடமளிக்க முடியாது என்பதே அனைத்து தரப்பினருடைய எண்ணமும் விருப்பமுமாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகின்றது எனவும் 
தெரிவித்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக உணர்வுபூர்வமான முறையில் ஒன்று சேரும் அஞ்சலி நிகழ்வில் இதுவரை காலமும் எந்த விதமான செயலூக்கமும் இல்லாமல், தமது நலன்களுக்காக வலுவிழந்த செயற்பாடுகள் ஊடாக இவ்வாறான அரசியல் சாயங்களை பூச முயல வேண்டாம் எனவும், சிந்திய குருதி மண்ணோடு கலந்து உருக்களை மட்டுமல்ல மனங்களையும் சிதைத்து ஆறாத மனதோடு ஊசலாடும் வாழ்க்கையை வாழும் மக்கள் மீது சித்திரங்களை மீண்டும் வரையலாம் என கனவு காணாதீர்கள்.
இத்தலைமுறையினரான நாம் வெளிப்படுத்துவது உணர்வு பூர்வமான போராட்ட வெளிப்படுத்தல்களே எனவும், உறங்கும் நம் உறவுகளுக்காக கண்ணீரை காணிக்கையாக்கி உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும், எமது பூர்வ பந்த ஆத்ம திருப்திக்காகவும் செயற்படுவோம் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் மேலும்
 தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>