உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 130 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் பிரான்ஸ் 24 வது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு நேற்யை தினம் இந்த பட்டியல்
வௌியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் பின்லாந்து இரண்டாவது தடவையாகவும் முதல் இடத்தினைப்பிடித்துள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை நோர்டிக் நாடுகள் பெற்றுள்ளன.
நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைத் தரம், ஆயுட்காலம், சமூக ஒத்துழைப்பு மற்றும் இலஞ்ச ஊழல் ஆகிய விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்த பட்டியல்
தயாரிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக