18

siruppiddy

பிப்ரவரி 27, 2018

இனம் தெரியாதோரால் தம்பலகாமத்தில் பஸ் வண்டி தீக்கிரை!!

திருகோணமலை – தம்பலகாமம், கிண்ணியா பிரதான வீதியின் பட்டிமேடு சந்தியில் பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் வண்டிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தம்பலகாம பொலிஸார் தெரிவித்தனர்.இந்த பஸ் வண்டி முள்ளிப்பொத்தானை 97ஆம் கட்டையை சேர்ந்த சமிந்த என்பவருக்கு சொந்தமானது எனவும் தெரியவருகிறது.
பஸ் வண்டி முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாம பொலிஸார் மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





இரு புதிய உறுப்பினர்கள் வட மாகாண சபையில் பதவியேற்பு

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர்களான எஸ்.எம்.எ. நியாஸ் மற்றும் சபாரட்ணம் குகதாஸ் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து முன்முதலாக இன்று அவைக்கு 
வருகைதந்திருந்தனர்.
யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று 117ஆவது அமர்வு ஆரம்பமாகியது.அதன்போது இரு உறுப்பினர்களும் அவைத் தலைவரினால் சபைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்
.வடமாகாண 
சபையின் உறுப்பினரான இம்மானுவேல் ஆர்னோல்டிற்குப் பதிலாக ரெலோ கட்சியின் உறுப்பினர் சபாரட்ணம் குகதாஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் றயிஸ் இராஜினாமா செய்து
 கொண்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிதாக எஸ்.எம்.எ. நியாஸ் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.இதனைத் தொடர்ந்து இருவரும் தமது கன்னியுரையினை 
சபையில் ஆற்றினார்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிப்ரவரி 13, 2018

வெடித்த குண்டு முல்லைத்தீவு பிரதேசத்தில்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சில வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைக்குப் பிரதேச நபர் ஒருவர் தீ வைத்தபோது அதற்குள் இருந்த ஆர்.பி.ஜி ரக வெடிபொருள் வெடித்ததால் குப்பை மேட்டிலிருந்த சில கழிவுப் பொருள்கள் அருகிலுள்ள வீடுகள் மீது சிதறி வீழ்ந்திருக்கின்றன.
சில வீடுகளுக்கு சிறிதளவான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக முல்லைத்தீவு பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த வெடிப்புச் சம்பவத்தால் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
போருக்குப் பின்னர் முல்லைத்தீவுப் பகுதி.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஜனவரி 31, 2018

வடக்கு முதல்வர் குழந்தைகள்” முறையாக வளர்க்கப்பட வேண்டும்

அன்றைய மக்கள் படிப்பறிவில் வளர்ச்சி அடையாத நிலையிலும் தமது பிள்ளைகள் கல்வி அறிவில் உயர்ந்து ஒழுக்க சீலர்களாக விளங்க வேண்டும், 
உண்மை பேசுபவர்களாக இருக்க வேண்டும் என எண்ணியதாலே அன்றைய குழந்தைகள் சிறப்பாக வளர்ந்தனர். இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். பொது நூலக மண்டபத்தில் சாந்திகம் "சிறுவர் உளநலம்"நூல் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்ததார். அவர் தெரிவித்ததாவது,
அந்தக் காலத்தில் பிள்ளைகளின் நடவடிக்கைகள் தாய்மாரினால் தொடர்ந்து அவதானிக்கப்பட்டது. ஒரு சிறிய பென்சில் கூடுதலாக அவரின் புத்தகப் பையில் காணப்பட்டால் அது பற்றி விசாரிப்பார்கள் அதனால் பிள்ளைகள் உண்மை பேசுகின்ற பழக்கத்தைச் சிறு வயதிலிருந்தே கற்றுக்கொண்டார்கள்.
மற்றவர்கள் பொருட்கள் மீது ஆசை
 வைப்பதைத் தவிர்த்துக் கொண்டார்கள். அக் காலத் தாய்மார்களுக்கு உளவளம் உடலியக்கத் திறன்கள், உறவாடல் திறன்கள் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் சமூக திறன்களை விருத்தி செய்யக்கூடிய அறம் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தார்கள அதனால் அவர்களின் குழந்தை வளர்ப்பு சிறப்பாக அமைந்திருந்தது.
இன்று குடும்பப் பின்னணிகள் வெகுவாக மாறி விட்டன. தாய் தந்தை இருவரும் சேர்ந்து உழைக்கின்ற குடும்ப 
அமைப்பு உருவாகி விட்டது. மாலையில் உழைத்துச் சோர்வடைந்த நிலையில் வீட்டுக்குத் திரும்பும் பெற்றோருக்கு தமது பிள்ளைகளுடன் பேச நேரம் கிடைப்பதில்லை. இன்றைய குழந்தைகளோ தாயின் அன்பிற்காக ஏங்குகின்றார்கள்.
இதனால் குழந்தைகள் கையடக்கத் தொலைபேசி, தொலைக்காட்சி, மடிக்கணனி, இணையத்தளங்களுடனும் 
கழிக்கின்றார்கள். பிறப்பிலிருந்தே இலத்திரனியல் சாதனங்களுடனும் உணர்வற்ற இயந்திரங்களுடனும் பொழுதைக் கழிக்கின்ற குழந்தைகள் இயல்பாகவே ஏனையவர்களுடன் பழகுகின்ற தன்மை, அன்பைப் பரிமாறுகின்ற தன்மை ஆகியவற்றிலிருந்து ஒதுங்கி தனியராக வளரத் தொடங்குகின்றார்கள் இன்று அன்பு கிடைப்பதில்லை. கண்டிப்புக்கும் இடமில்லாமல்
 போய்விட்டது.
ஆசிரியர்கள் காட்டுகின்ற அன்பானது பிள்ளைகளைப் பாடசாலைக்கு இழுத்து வருவதற்கு ஒரு உந்து சக்தியாக விளங்க வேண்டும். எனவே இக் குழந்தைகள் முறையாக வளர்க்கப்பட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோமாக 
- என்றார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஜனவரி 24, 2018

மீனவர்களிடையே முல்லையில் பதற்றம்


முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் சிங்கள மற்றும் தமிழ் மீனவர்களிடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.  அரசியல் நோக்கங்களுக்காக தெற்கில் இருந்து 300 மீனவர்கள் அழைத்து வரப்பட்டு 
அப்பகுதியில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை அநீதியானது என, அப்பிரதேசத்திலுள்ள தமிழ் மீனவர்கள் 
குற்றம் சுமத்தியுள்ளனர்.
தெற்கு மீனவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க தேவையான நிலங்களைப் பெற, நிளஅளவைத் திணைக்களத்தினர் அந்தப் பகுதிக்கு சென்றிருந்த போதே, அங்கு பாரம்பரியமாக வசித்து வரும் மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து இரு தரப்பு மீனவர்களிடையேயும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. பின்னர், நிலம் அளவிடும் நடவடிகைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் தலையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




டிசம்பர் 08, 2017

கொழும்பு மாநகர சபைத் தேர்தல் களத்தில் ஸாலி- ரோஸி மோதல்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கோட்டையாகக் கருதப்படுகின்ற கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றுவதற்கான வியூகங்களை வகுப்பதில் பிரதான அரசியல் கட்சிகள் ஆர்வங்காட்டி 
வருகின்றன.கொழும்பு மாநகர சபையானது முக்கியத்துவமிக்க சபையாகக் கருதப்படுவதுடன், அந்த சபையில் மேயராக பதவி வகிப்பவர், மத்திய அரசின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரொருவருக்கு நிகரான சிறப்புரிமைகளைப் பெற்றிருப்பார்.
மஹிந்த ஆட்சிக்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்திருந்தாலும், கொழும்பு மாநகர சபையே அதற்குக் கைகொடுத்தது. அத்துடன், தேர்தல் வெற்றி
 நாயகன் என சிங்கள மக்களால் போற்றப்படும் மஹிந்தவால்கூட குறித்த மாநகர சபையைக் கைப்பற்ற முடியாமல் போனது. இவ்வாறு பல வழிகளிலும் கொழும்பு மாநகர சபையானது முக்கியத்துவமிக்க சபையாகக் கருதப்படுகின்றது.இதனால்தான் இம்முறை அந்தச் சபையைக் கைப்பற்றிவிடவேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் கங்கணங்கட்டியுள்ளன.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் எம்.பி. ரோஸி சேனாநாயக்கவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அஸாத் ஸாலியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஒமர் காமிலும் முதன்மை வேட்பாளராக களமிறக்கப்படவுள்ளனர் என அறியமுடிகின்றது.அத்துடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் திருகேதீஸ் செல்லசாமி மேயர் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



நவம்பர் 03, 2017

பஸ்களுக்குள் வைத்து யாழில் பெண்கள் மீது பாலியல் சித்திரவதை?

வடக்கு மாகாணத்தில் போக்குவரத்து சேவையிலீடுபடும் பேருந்துகளே பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்த இடமாக காணப்படுவதாக பொதுமக்களால் குற்றம்
 சாட்டப்படுகின்றது.
வறிய மக்களுடன் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் மட்டுமல்லாது பாடசாலை மாணவர்களும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களும் நாளாந்தம் தமது தேவைகளுக்காக அதிகளவில் பயன்படுத்தி வரும் போக்குவரத்து சாதனம்தான் இந்த தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள்.
நாளாந்தம் மக்கள் தத்தமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வதற்காக பயணிக்கும் இந்த பேருந்துகளில் அதன் கொள்ளளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றப்படுகின்றனர். அதனால் நாளாந்தம் பயணிகள் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.
குறிப்பாக பாடசாலைகளுக்கும் தனியார் வகுப்புகளுக்கும் மட்டுமல்லாது அரச மற்றும் தனியார் தொழில்களுக்கு செல்லும் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை நாளாந்தம் பல பிரச்சினைகளை குறித்த பேருந்து சேவைகளால் எதிர்கொண்டுவருகின்றனர் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்துகளில் மட்டுமல்லாது அரச பேருந்துகளிலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதை காணமுடிகின்றது. காலை வேளைகளில் தொழிலுக்கு பாடசாலை மற்றும் தெழிலகங்களுக்கு செல்லும்போதும்  மாலை நேரங்களில் வீடு திரும்பும்போதும் பேருந்துகளில் பயணிக்கும் பல பெண்கள் அதிகளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாவதை 
காணமுடிகின்றது.

பேருந்துகளில் பாலியல் எண்ணத்துடன் பல ஆண்கள் பயணிப்பதனால் பெண்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் பேருந்துகளில் பகல் நேரங்களை விடவும் மாலை 5 மணிக்கு பின்னர் கூட்டம் அதிகம் என்பதால் இவ்வாறு நெருக்கடி நிலையை பயன்படுத்தி குறித்த கூட்டங்கள் பெண்களை தொல்லைகொடுத்து வருவதைக்
 காணமுடிகின்றது.
அலுவலகம், தொழிற்சாலை, தனியார் வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் மாலை வேளையிலேயே வீடு திரும்புகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பேருந்துகளில் ஏறும் சில ஆண்கள் திட்டமிட்ட வகையில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதுடன் அவற்றை படங்கள் எடுத்து அந்தப் படங்களைக் கொண்டு  குறித்த பெண்களை மிரட்டி  படுக்கையறைக்கு இழுப்பதான சம்பவங்களும் நடைபெறுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் விசனம் 
தெரிவித்துள்ளனர்.
அதைவிட பரிதாபமான விடயம் என்னவெனில் சில தனியார் பேருந்து மற்றும் அரச பேருந்து நடத்துநர்கள் பெண் பயணிகளை குறிப்பாக திருமணமான பெண்களை அதிகளவில் சீண்டி தமக்கு ஏற்றவகையில் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்றும் குற்றம்சாட்டப்படுகின்றது. இதற்கு சான்றாக சட்டத்தின் முன் சென்ற சம்பவங்கள்
 பல உள்ளன.
இதைவிட தனியார் பேருந்து நடத்துநர்கள் பெண்களின் முதுகில் தடவுவதும் மார்பகங்களில் தட்டுவதுமான சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன. இதை தட்டிக்கேட்டால் இது சகஜம் என்று சொல்லும் வாகன நடத்துநர்கள் அவ்வாறு ஒத்துப்போகாவிட்டால் இறங்குமாறும் சத்தமிடுகின்றார்கள் என பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனை 
தெரிவித்துவருகின்றனர்.