18

siruppiddy

அக்டோபர் 22, 2020

விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு 21-10-20.புதன்கிழமை
 அன்று வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில், நாடு கடந்த தமிழீழ அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த கோரிக்கையினை தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு (Proscribed Organisations Appeal Commission) பரிசீலித்ததன் அடிப்படையில் குறித்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.நாடுகடந்த
 தமிழீழ அரசாங்கம் தொடுத்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.இந்த வழக்கானதுதிறந்த சாட்சியங்களின் அடிப்படையிலும், இரகசிய சாட்சியங்களின் அடிப்படையிலும் நடைபெற்றது. திறந்த சாட்சியங்களின் விசாரணையின் போது இங்கிலாந்து 
மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Maya Lester QC, உட்பட Malcolm Birdling of Brick Court Chambers with Jamie Potter and Caroline Robinson of Bindmans LLP ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்க்தின் சட்டவாளர்களாக வாதிட்டிருந்தனர்.
இரகசிய விசாரணை போது இங்கிலாந்து 
மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Angus McCulloch Q.C and Rachel Tony. ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டவாளராக வாதிட்டிருந்தார்.எவ்விதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை
 எனச்சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சிடம் 2008ம் ஆண்டில் நாடுகடந்த 
தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.இதனை 
பிரித்தானிய உள்துறை அமைச்சு நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக Proscribed Organisations Appeal Commission (‘POAC’) ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கையினை 
முன்னெடுத்திருந்தது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



அக்டோபர் 21, 2020

இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கம்

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தவறானது எனவும் தடை செய்யப்பட்ட அமைப்புகளிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கியும் இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு 
வழங்கியுள்ளது.
இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விடுக்கப்பட்டிருந்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2018இல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற இந்த வழக்கில், விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என ஈழத்தமிழரசு சார்பில் 
வாதிடப்பட்டது.
அந்தவகையில், இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தவறானது என இன்று(21) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட அமைப்புகளிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கியும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>










செப்டம்பர் 22, 2020

யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் ஒளி பிரிவு

 

யாழ்.தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புற்றுநோய் ஒளி கதிர் பிரிவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் (ஆர்பாட்ட ம் ) போராட்டத்தால் ஒளி கதிர் சிகிச்சை பெறமுடியாத அபயா  நிலை உள்ளதாக 
புற்றுநோயாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கும்   நிலையில் புற்றுநோய் வைத்தியசாலை ஒளி கதிர் பிரிவு  சிறந்தது   இயங்க  உதவி அரசாங்கசபைபனிமனை  (பிரதச சபை)  கிராமசேவகர் பிரிவும்
 இணைத்து இதற்க்கு ஓர் 
நடவடிக்கைஎடுக்குமாறு மிகத்தாழ்மையுடன்
 வேண்டிநிற்கின்றோம்  நன்றி 
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>


செப்டம்பர் 20, 2020

நார்வே முன்னாள் தூதர் எரிக் சொல்ஹெம் .ராஜீவ் கொலை வழக்குபற்றி கூறியுள்ளார்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் என தன்னிடம் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்ததாக இலங்கைக்கான நார்வே முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெம் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களுக்காக இந்தியா உறுதியான ஆதரவை வழங்கி வந்திருந்ததாகவும்
 அவர் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளின் தனி நாடு கோரிக்கைக்கு சர்வதேச சமூகத்தில் உள்ள எவரும் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்களோ, இந்தியாவோ, அமெரிக்காவோ, சீனாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ 
அல்லது வேறு எவரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இலங்கைக்கு கூட்டாட்சி தீர்வு தருவதே அமைதி நடைமுறையின் நோக்கமாக இருந்தது. பெரும்பான்மை தமிழர்கள், அதனால் மகிழ்ந்திருப்பார்கள் என்று எரிக் சொல்ஹெம் கூறியிருந்தார்.
 
நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஜூலை 29, 2020

எழுவர் விடுதலை,! ஒரு வாரத்தில் பதில் தர அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு


எழுவர் விடுதலை, பேரறிவாளன் பரோல் தொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று வருகின்றனர். பேரறிவாளன் 28 ஆண்டுகளாக புழல் சிறையில் தண்டனையில் உள்ளார்.
அண்மையில் பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் அளிக்க வேண்டும் என்று அவரது தாய் அற்புதம்மாள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஏற்கனவே பேரறிவாளனுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் புழல் சிறையில் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பேரறிவாளனுக்கும் கொரோனா
தாக்கிவிடுமோ என்ற எண்ணத்தில் அற்புதம்மாள் வழக்கை தொடர்ந்துள்ளார்.
அப்போது, தமிழக அரசு தரப்பில் 2 ஆண்டுகளுக்கு பிறகுதான் பரோல் தர  முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பேரறிவாளன் தரப்பில் 7 பேர் விடுதலை தீர்மானம் மீது ஆளுநர் 2 ஆண்டுகளுக்கு மேல் முடிவு எடுக்காமல் நிலுவையில் இருப்பதாக குற்றச்சாட்டு முன்
வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 7 பேர் விடுதலைக்கான தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும் ? எனவே இது குறித்தும், பேரறிவாளன் பரோல் தொடர்பாகவும் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள்
தெரிவித்தனர்.



ஜூலை 11, 2020

இராணுவத்தின் அலுவலகம் வடக்கில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும்

வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் தலா மூன்று இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் இராணுவ அதிகாரியுடன் கூடிய இராணுவ அலுவலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட உள்ளளதுடன் இரண்டு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட 
உள்ளனர்.
பிரதேசத்தில் ஏதேனும் குற்றச் செயல் அல்லது போதைப் பொருள் தொடர்பான சம்பவங்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட கிராம சேவகர் முதலில் பிரதேசத்தில் உள்ள இராணுவ அலுவலகத்தில் உள்ள அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும். இதனையடுத்து கிராம சேவகரின் உதவியுடன் அந்த இராணுவ அதிகாரி தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்.
இராணுவ அதிகாரி மற்றும் இரண்டு படையினர், கிராம சேவகர் அலுவலகத்துடன் இணைந்து கடமையாற்றுவார்கள்.
அதேவேளை காங்கேசன்துறை கடற்படை 
முகாமில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள வடக்கு பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி இசுரு தேவப்பிரிய, கடற்படையினருக்கு கொரோனா வைரசுடன்
 மாத்திரமல்லாது போதைப் பொருள் கடத்தல்காரர்களுடனும் போராட வேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.
கடந்த ஆண்டில் மாத்திரம் வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரத்து 350 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை கைப்பற்றியதாகவும் 
அவர் கூறியுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>


ஜூலை 09, 2020

நாட்டில் போதைப் பொருள் டீல்; நான்கு வாகனங்கள் கைப்பற்றல்

பொலிஸ் போதைப் பொருள் பணியக பொலிஸாரின் போதைப் பொருள் டீல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 18 பொலிஸாரில் ஒருவரான சப் இன்ஸ்பெக்டருக்கு சொந்தமான மூன்று லொறிகளும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் கம்பஹாவில்
 கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப் படுகின்றது  
நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>