18

siruppiddy

நவம்பர் 22, 2022

யாழ் நல்லூரில் மாவீரர்களின் பெயர்கள் திரைநீக்க நிகழ்வு 21.11.22

 நல்லூரில் மாவீரர் வாரம் 21-11-2022.அன்றயதினம்   ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.இதன்போது 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் மாலை 6.30 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன் அவை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.தியாக...

மே 14, 2022

இலங்கை அரச தலைவர் முன்னிலையில் இன்று பதவியேற்கும் நான்கு அமைச்சர்கள்

நான்கு அமைச்சர்கள் இன்று அரச தலைவர் முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, ஜி.எல்.பீரிஸ், பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னதாக ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும் காஞ்சன விஜேசேகர மின்சக்தி எரிசக்தி அமைச்சராகவும் , தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராகவும் , பிரசன்ன ரணதுங்க பொது பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தனர்.இந்நிலையில்,...

ஜனவரி 25, 2022

கிளிநொச்சி புதிய கருவிகளுடன் வந்த தென்னிலங்கையர்கள் கைது

கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில் புதையல் தோண்டும் முயற்சிக்காக இரண்டு வாகனங்களில் வந்த ஏழு பேர் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை அவர்களிடம் இருந்து புதையல் தேடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்கானர்ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பொலிஸ் கான்ஷ்டபிள் என்று தெரியவந்துள்ளது. இராமநாதபுரம், சம்புக்குளம் பகுதியில் புதையல் அகழ்வதற்காக வந்ததாக...

ஆகஸ்ட் 31, 2021

நாட்டில் சீனிக்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடு நீண்ட வரிசையில் மக்கள்

இலங்கையில் சீனிக்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.இந்நிலையில் சதொசயில் விற்பனை செய்யப்படும் சீனியை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.அமைச்சர் லசந்த அழகியவண்ண வெளியிட்ட தகவலை அடுத்து சதொசயில் சீனியின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதுவரையில் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி, தற்போது 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுஅதற்கமைய...

மே 25, 2021

கடைகளை கிளிநொச்சியில் மூடிய சிறிலங்கா காவல் துறை

  கிளிநொச்சி நகரில், 25-05-2021.இன்றைய தினம் திறக்கப்பட்ட வியாபார நிலையங்களில், அத்தியாவசிய வியாபார நிலையங்களை தவிர ஏனையவற்றை காவல் துறை  உடனடியாக மூடியுள்ளனர்.இன்றைய தினம் அதிகாலை, பயண கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில், கிளிநொச்சி நகரில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன.பொதுமக்களும் வழமை போன்று நகருக்கு வருகை தந்திருந்தனர். ஆனால், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களைத் தவிர ஏனையவற்றை திறப்பதற்கு...

சர்வதேச அரங்கில் தமிழர்களின் உரிமை தொடர்பாக குரல் கொடுத்தால் அது பயங்கரவாதமாம்

 தமிழ் மக்களின் நீதி மறுப்பு, தமிழர்களின் உரிமை தொடர்பாக சர்வதேச அரங்கில் குரல் கொடுத்தால் அது பயங்கரவாதம், ஆனால் முதலீடு என்ற பெயரில் சர்வதேச நாடுகள் இலங்கையை துண்டாடுவது தேசியவாதம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய துறைமுகங்கள் சட்டமூலம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த...

ஏப்ரல் 24, 2021

முன்னாள் அமைச்சர் ரிஷாத் எம்.பி.யின் கைது குறித்து மனோ

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.24-04-2021. இன்று கைதானமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநூலில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.‘நாடாளுமன்ற உறுப்பினர், கட்சித் தலைவர் நண்பர் ரிஷாத் பதியுதீனை இந்த ரமழான் மாதத்தில் ‘அதிகாலை 3 மணி’ க்கு வீடு புகுந்து, தலைமறைவாக வாழும் பாதாள உலகக் கேடியை இழுத்துச் செல்வதைப் போல் கைது செய்ததன் பின்னுள்ள ‘ஆவேசம்’ என்ன? ராஜபக்ஷ அரசின் கொடூர ராணுவ முகம் வெளிப்படுகிறதா?’ எனப் பதிவிட்டுள்ளார்....