சீனாவின் உதவியுடன் பாகிஸ்தானில் மூன்றாவது அணு உலை கட்டப்பட்டு வருவதாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்கனவே 2 அணு உலைகள் உள்ளன. இந்நிலையில் தற்போது 3-வது அணு உலை கட்டப்பட்டு வருகிறது.
இதற்கு சீனா இரகசியமாக தொழில்நுட்ப உதவிகளை செய்து வருவதாக அமெரிக்காவின் உளவுத்துறை குற்றம் சுமத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணுசக்தி கமிஷனின் பிரதிநிதிகள் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் திகதி முதல் 18-ந் திகதிக்குள் சீன தலைநகர் பெய்ஜிங்கில் அணுசக்தித்துறை பிரதிநிதிகளை சந்திந்து ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதில் சாஷ்மாவில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி உலையை நிறுவுவது என திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு அங்கு 2 அணு உலைகளும் சீன தொழில் நுட்பத்தில்தான் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் சர்வதேச அணு ஆயுத எதிர்ப்பு ஒப்பந்தத்தை சீனா மீறியுள்ளது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இந்த தகவலை தி வாஷிங்டன் ஃப்ரி பேகன் என்ற நாளிதழ் வெளியிட்டுள்ளது.
ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டு குறித்து சீனாவோ, பாகிஸ்தானோ எந்த வித பதிலும் அளிக்கவில்லை. அதனை உறுதிபடுத்தவும் இல்லை. அதே சமயம் அணு ஆயுதங்களையோ, தொழில் நுட்ப உதவிகளையோ வேறு எந்த நாட்டிற்கும் விற்பனை செய்யவும் இல்லை என்று சீனாவில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானிஸ்கு அணு உலை கட்டுவது தொடர்பான உதவியோ, வேறு ஏதோனும் அணு ஆயுத உதவியோ சீனா வழங்கியிருக்கும் பட்சத்தில் ஜூன் மாதம் தொடங்கும் என்.எஸ்.ஜி மாநாட்டில் எதிரொலிக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக