18

siruppiddy

ஆகஸ்ட் 15, 2016

மேலும் 500 ஏக்கர் காணியை இராணுவம் விடுவிக்கும் சாத்தியம்!

வலி.வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு பகுதியில் மீதியாக உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சினால் விடுவிக்கக் கோரிய 1528 ஏக்கர் காணிகளில் 500 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் விடுவிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தெரியவருகிறது.
மீதியாக 5043 ஏக்கர் காணி இன்னமும் இராணுவத்தினர் வசம் உள்ளது.
அந்த வகையில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 1528 ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் அண்மையில் மீள் குடியேற்ற அமைச்சினால் அமைச்சரவைப்பத்திரம் தாக்கல் செய்யப்
 பட்டிருந்தது.
பாதுகாப்புபடை பிரிவில் இருந்து அதற்கான பரிந்துரை அறிக்கை கிடைக்காத காரணத்தினால் அமைச்சரவை அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு கோரிய 1528 ஏக்கர் காணியில் அண்ணளவாக 500 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்படும் என இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆராய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி நேற்று வலி.வடக்கு பகுதிகளுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அப்போது பாதுகாப்பு படைத்தரப்பு மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் பளை, வீமன்காமம் பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களையும் சந்தித்து கலந்துரையாடியதுடன் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்தையும் பார்வையிட்டார்.
மேலதிகமாக நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களை விரைவாக மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மும்முரமாக செயற்படுவது தொடர்பிலும் இதன்போது 
கலந்துரையாடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக