அந்த இரகசியம் வெளியிடப்படும் சந்தர்ப்பத்தில் ஶ்ரீலங்கா ஆட்சி அரசியல் பீடங்களில் பெரும்பூகம்பம் நிகழும் போர் வெற்றி நாயகர்களாக வலம்வரும் சிங்களத்தின் முகமூடி கிழியும்
இறுதி யுத்தத்தில் ஶ்ரீலங்கா அரசால் இறந்தாக கூறப்பட்ட தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பற்றி மஹிந்த அரசினால் நிருபிக்கப்பட்ட சான்றுகள் இன்று வரை வெளியிடப்பட வில்லை.
இதன் காரணமாக தொடர்ந்தும் தேசிய தலைவர் கொல்லப்படவில்லை உயிருடன் இருப்பதாகவே செய்திகள் வெளிவருகின்றன.
ஒருவேளை தலைவர் பிரபாகரனுக்கு இறுதி யுத்தத்தில் என்ன நிகழ்ந்தது? இறுதி யுத்தத்தின் உண்மையான தன்மை என்ன? கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு நிகழ்ந்தது என்ன? என்பதையே ஶ்ரீலங்கா ஜனாதிபதி வெளியிடப்போகின்றாரா? என்பதே கேள்வியாக உள்ளது.
தற்போது வரை மஹிந்தவின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அவர் நாட்டில் யுத்தத்தை நிறுத்தினார் என்ற காரணத்தினாலேயே மக்கள் மத்தியில் எடுபடாமல் செல்கின்றது.
இங்கு சிங்கள மக்களால் மன்னனாக வர்ணிக்கப்பட்டு வரும் மஹிந்தவிற்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு போர்க் குற்றம் மற்றும் தேசிய தலைவர் பிரபாகரன் பற்றிய உண்மைகளை வெளியிடப்படும் போது மஹிந்தவிற்கு உள்நாட்டில் வாழும் சாத்தியம் குறைந்து விடும் என்பதும் உண்மையே.
மஹிந்தவை அடக்க ரணில் மற்றும் ஶ்ரீலங்கா ஜனாதிபதி வைத்திருக்கும் மிகப்பெரிய ஆயுதம் தலைவர் பற்றிய உண்மையே எனவும் தற்போது சந்தேகங்கள் வழுப்பெற்று வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும் இறுதியுத்தம் தொடர்பில் உண்மைகள் வெளிவரும் போது நாட்டு மக்களாலும் மஹிந்தவின் ஆதரவாளர்களினாலும் மஹிந்த தண்டிக்கப்படுவார்.
மாறாக மஹிந்தவினால் தற்போதைய ஆட்சிக்கு இடையூறுகளும், புதிய கட்சி எண்ணங்களும் உருவாகாமல் இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்படும் போது நாட்டில் குழப்பம் ஏற்படும் அது சிலவேளை இனக்கலவரமாகவும் மாறிவிடலாம். அவ்வாறு ஏற்பட்டு விட்டால் அதற்கு நல்லாட்சி மட்டுமே பதில் கூறவேண்டும்.
அதன் காரணமாகவே தகுந்த நேரம் வரும் வரை இரகசியம் காப்பாற்றப்பட்டு வருகின்றது எனவும் எவ்வாறாயினும் தற்போது நாடு செல்லும் போக்கில் இறுதியுத்தம் தொடர்பில் மெது மெதுவாக உண்மைகள் புலப்படுத்தப்படும் எனவும் அரசியல் தரப்பு அவதானிகள் தெரிவித்து
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக