18

siruppiddy

பிப்ரவரி 03, 2017

இந்திய மத்திய அரசினால் முதல்வருக்கு அச்சுறுத்தல்!

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இந்திய மத்திய அரசினால்.( பிரித்தானியா பின்னணியில் ) பல்வேறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வட மாகாண சபை பிரித்தானியாவின் தெற்கு லண்டனில், கிங்ஸ்டன் நகர சபையுடன் (Kingston Borough Council) கடந்த வருட இறுதிப் பகுதியில் இணைந்திருந்தது. இது தொடர்பிலேயே இந்திய அரசாங்கத்தினால் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைவதற்கு முன்னர் இந்தியாவின் முழுமையான அனுமதியை பெற்றுக் கொள்ளாமை தொடர்பில் முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள நாட்டின் நகர சபையுடன் இணைவதற்கு பதிலாக இந்திய மாநில அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தால், மிகவும் சாதகமான முடிவுகளை பெற்றிருக்க முடிந்திருக்கும் என முன்னாள் இந்திய உயர் ஸ்தானிகர் ஊடாக இந்திய மத்திய அரசாங்கம், வடக்கு முதல்வருக்கு 
தெரிவித்துள்ளது.
தெற்கு லண்டனில், கிங்ஸ்டன் நகர சபை எல்லை, இலங்கைக்கு தொடர்புடைய பாரிய அளவு தமிழ் மக்கள் வாழும் பிரதேசமாகும்.
கடந்த வருடம் கிங்ஸ்டன் நகர சபை மற்றும் வட மாகாண சபை இணைந்து செயற்படுவதற்கு ஒப்பந்தம் ஒன்று 
கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்ததிற்கமைய வட மாகாண சபையின் கல்வி, சுகாதாரம், தொழில்நுட்ப நடவடிக்கைகளுக்கு அவசியமான பயிற்சி வழங்குதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்படவுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக