வவுனியா, ஓமந்தைப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இரு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஓமந்தை, சின்னப்புதுக்குள வீதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கு இடையில் மோதல்
ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அனுமதிக்கப்பட்டவரில் ஒருவரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இம்மோதலில் இரு மோட்டார் சைக்கிள்கள் எரியூட்டப்பட்டு, முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், மோதலில் ஈடுபட்டோர் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றினை பொலிஸார்
கைப்பற்றியுள்ளனர்
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் ,இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக