அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடத்தல் தீவு கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் முப்படையினர் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.விடத்தல் தீவு பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை டெட்டனேட்டர்களுடன் 4பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையிலேயே முப்படையினர் இணைந்து குறித்த
சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.வீடுகளுக்குச் சென்ற படையினர் வீடுகளை முழுமையாக
சோதனையிட்டதோடு, வீட்டில் உள்ளவர்களின் விபரங்களையும் பெற்றுக்கொண்
டனர். மன்னார் பிரதான பாலத்தினூடாக உள்வரும், வெளிச்செல்லும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு,
மக்களின் அடையாள அட்டைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.மன்னார் நகரில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் படையினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் மதியம் வரை வீடு வீடாகச் சென்று கடும் சோதனைகளையும், தேடுதல்களையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட விடத்தல் தீவைச் சேர்ந்த 4 பேர் இராணுவத்தினரினால், அடம்பன் பொலிஸாரிடம் மேலதிக விசாரனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக