18

siruppiddy

ஏப்ரல் 24, 2021

முன்னாள் அமைச்சர் ரிஷாத் எம்.பி.யின் கைது குறித்து மனோ

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.24-04-2021. இன்று கைதானமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநூலில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.‘நாடாளுமன்ற உறுப்பினர், கட்சித் தலைவர் நண்பர் ரிஷாத் பதியுதீனை இந்த ரமழான் மாதத்தில் ‘அதிகாலை 3 மணி’ க்கு வீடு புகுந்து, தலைமறைவாக வாழும் பாதாள உலகக் கேடியை இழுத்துச் செல்வதைப் போல் கைது செய்ததன் பின்னுள்ள ‘ஆவேசம்’ என்ன? ராஜபக்ஷ அரசின் கொடூர ராணுவ முகம் வெளிப்படுகிறதா?’ எனப் பதிவிட்டுள்ளார்....

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்தும் சகோதரரும் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் சிஐடியினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.அவரது சகோதரரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பவுத்தலோக மாவத்தை வெள்ளவத்தையில் உள்ள வீடுகளி;ல் வைத்து இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைகுண்டுதாரிகளிற்கு உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.சந்தேகநபர்களிற்கு எதிராக உறுதியான ஆதாரங்களை சிஐடியினர் பெற்றுக்ககொண்டுள்ளனர்...

ஏப்ரல் 19, 2021

யாழில் இலங்கை படைகளில் கூலியாட்களாக தமிழர்கள்

இலங்கை இராணுவத்தில் கூலி வேலைகளிற்கு ஆட்சேர்ப்பதில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தது 1,600 தமிழ் இளைஞர்கள் மூன்று மாத காலத்திற்குள் இணைந்துள்ளனர்.இலங்கை இராணுவத்தில் அவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத் தலைமையகத்தில் பாதுகாப்புப் படை அதிகாரிகளை உரையாற்றும் போது அவர் இதை வெளிப்படுத்தினார்."பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக மக்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதை நாங்கள் இன்னும் காண்கிறோம்....

ஏப்ரல் 18, 2021

யாழ்.தெல்லிப்பழை புற்றுநோய் கதிரியக்க நிபுணர்கள் கூட்டாக சேர்ந்து மோசடி

வவுனியா வடக்கு கல்வி வலய மோசடியை தொடர்ந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நடந்தேறிய மோசடியை மூடி மறைக்க சுகாதார துறை மும்முரமாகியுள்ளது.புற்றுநோயுடன் உயிருக்காக போராடும் நோயாளிகளிற்கான கதிர்வீச்சு சிகிச்சையினை உரிய காலத்தில் வழங்காது அவ்வாறு வழங்கியதாக பொய் கணக்கு காண்பித்து மில்லியன் கணக்கில் மோசடி அரங்கேறியுள்ளது.உரிய சிகிச்சையின்றி நோயாளிகள் தொடர்ச்சியாக உயிரிழந்த போதும் அதனை கண்டு கொள்ளாது கதிரியக்க நிபுணர்கள் கூட்டாக சேர்ந்து மோசடி செய்தமை...

ஏப்ரல் 11, 2021

வாழைச்சேனையில் மணல் ஏற்றி வந்த 25 சந்தேக நபர்கள் கைது

வாழைச்சேனை காவற்துறை பிரிவில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த இருபத்தைந்து (25) சந்தேக நபர்களும், இருபத்தைந்து (25); வாகனங்களும்.11-04-2021. இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.வாழைச்சேனை காவற்துறை பிரிவிற்குட்பட்ட வாகனேரி, பொத்தானை, புலிபாய்ந்தகல், ஒமடியாமடு, ஊத்துச்சேனை, வெள்ளாமைச்சேனை, மற்றும் புணாணை ஆகிய பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வருவதாக வாழைச்சேனை...