18

siruppiddy

ஜூலை 27, 2014

கட்டிலில் 23 வருடங்களாக கழுத்தின் கீழ் இயங்காமல் !!!

 23 வருடங்களாக கழுத்தின் கீழ் இயங்காமல் கட்டிலில் கிடத்தப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர். தமிழ் மக்களின் அவலம் ஓடும் நதியா! அவலத்தை நாம் அருந்தலாமா? தலையங்கத்தை பார்த்தவுடன் பீமனுக்கு விசர் என்று சொல்லியிருப்பீர்கள் அல்லது சொல்லத்தோன்றும். உங்கள் நியாயமான ஆதங்கத்தை புரிந்து கொள்ள என்னாலும் முடியும். ஆனாலும் தமிழ் மக்களின் அவலம் இன்றும் நதியாக ஓடுகின்றபோது அதில் தோய்ந்து , குடித்து , அதிலேயே கழித்து, கழுவி வாழும் ஈனப்பிறவிகளுக்கு இங்குள்ள...

ஜூலை 15, 2014

சம்பந்தன் கடும் சீற்றம் ஜனாதிபதியின் நடவடிக்கை கேவலமானது என்று !

வடக்கு முதலமைச்சரிடம் அளித்த வாக்குறுதியை உதாசீனம் செய்து மீண்டும் ஆளுநராக முன்னாள் இராணுவத் தளபதி சந்திரசிறியை ஆளுனராக நியமித்துள்ள ஜனாதிபதியின் செயல், தான்தோன்றித்தனமான - கேவலமான- அசிங்கமான நடவடிக்கை என்று சீற்றத்துடன் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். " இது தொடர்பில் அவர் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது.    வடக்கு மாகாண ஆளுநராக...

ஆரூடம் கூறுகிறதாம் பதவி துறக்கப் போகிறாராம் விக்னேஸ்வரன்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியை துறக்கத் திட்டமிட்டுள்ளதாக திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. விக்னேஸ்வரன் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக வடக்கிலிருந்து தகவல் கிடைத்துள்ளது என அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. வட மாகாண ஆளுனராக ஜீ.ஏ.சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் அவர் இந்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுனர் பதவிக்கு சிவில் அதிகாரி ஒருவரை...

ஜூலை 10, 2014

தொடர்ந்து உரிமைக்காகத் போராடுவது தவிர்க்க முடியாது:!!

எங்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான் ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டிய தேவை உருவானது. காலம் காலமாக எமது இனம் வாழ்ந்த எம் தாய்நிலத்தை எதிரியவன் அபகரித்த கணத்தில் தான் எம்மை நாம் பாதுகாத்து எமக்கு ஒரு நாடு வேண்டும் -எமது மக்களுக்கு விடுதலை வேண்டும் -எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஒரே ஒரு இலட்சியத்திற்காக போராட வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டோம். 30 வருட சாத்வீக...

ஜூலை 04, 2014

சிரேஸ்ட புலிகளின் தலைவர்கள் நால்வர் கைது என்கிறது மலேசியா

  தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டைகளின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூர் மற்றும் செலாங்குர் ஆகிய பகுதிகளில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இந்த தேடுதலை நடத்தியுள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவர் குண்டு தொடர்பான நிபுணர் எனவும், இவரிடம் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவன அடையாள அட்டை...

விரிசலை ஏற்படுத்தியது:மொழிப்பிரச்சினையே

30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே குடும்பமாக இருந்த எம்மத்தியில் 1956 ஆம் ஆண்டு மொழிப்பிரச்சினையே விரிசலை ஏற்படுத்தியது என்று விவசாய பிரதி அமைச்சர் வை.ஜி. பத்மசிறி கவலை தெரிவித்தார். முன்னாள் ஐ.நா. நிபுணர் துரைசுவாமி குமரன் தங்கராஜாவின் கருத்துரைத் தொனிப்பொருளான ‘வாழ்வாதார மேம்பாட்டுக்கான பாரம்பரிய சிற்றளவு விவசாய அறிவுசார் தொழில் முயற்சி’ மீதான பயிற்சிப்பட்டறை ஹெக்டர் கொப்பேகடுவ வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அண்மையில் நடத்தப்பட்டது. அதில்...