18

siruppiddy

ஏப்ரல் 16, 2016

இனி மலாக்கா கடற்பரப்பு இலங்கை கடற்படை கையில்?

இலங்கை கடற்படை கப்பல்கள் சிலவற்றை மலாக்கா கடற்பரப்பில் பாதுகாப்பு கடமைகளுக்காக பணியில் ஈடுபடுத்த இலங்கை கடற்படை தீர்மானித்துள்ளது.
சிங்கப்பூர் கடற்பரப்புக்கு அருகாமையில் இடம் பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் முகமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இலங்கை கடற்படை தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே, இலங்கைக்கு கடற்படைக்கு சொந்நமான கப்பலொன்று இந்தோனேஷியாவில் பாதுகாப்பு பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதோடு சுரனிமல மற்றும் சக்தி கப்பல்கள் மாலைத்தீவில் குறித்த பயிற்சியில் ஈடுபடுவதாக இலங்கை கடற்படையின் ஊடக பிரிவு
 தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக