யாழ், நீதி மன்றத்தின் முன்பாக நீதிபதி இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி நீதிபதி ஆனந்த ராஜா ஆகியோர் மீது அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்ட இணையதளங்களை கண்டித்து சட்டதரணிகள்பணிப்பகிஸ்கரிப்பில்
ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த பணிப்பகிஸ்கரிப்பு சற்று முன்னர் யாழ், மாவட்ட சட்டதரணிகள் குழுவின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, அண்மை காலமாக நீதிபதிகள் பற்றி தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் இது நீதிபதிகளை அவமதிக்கும் செயற்பாடுகள் எனவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்ட சட்டதரணிகள் கூறியுள்ளனர்.
மேலும், இன்றைய தினம் யாழ் நீதி மன்றிற்கு வருகை தந்த பொது மக்கள் மீண்டும் வீடு திரும்பி வருவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக