18

siruppiddy

ஜனவரி 12, 2015

குமரன் பத்மநாதன் பேட்டிஇலங்கையில்தான் இருக்கிறேன்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப் பட்டு வந்தவர் குமரன் பத்மநாதன். இவரை சுருக்கமாக ‘கே.பி.’ என்று அழைப்பார்கள்.

குமரன் பத்மநாதன் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயலாளராக இருந்தவர். விடுதலைப்புலிகளின் தலைவரான பிரகாபரனுக்கு வலது கரம் போல் திகழ்ந்த இவர், அந்த இயக்கத்தின் ஆயுத கொள்முதல் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

2009-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி குமரன் பத்மநாதன் மலேசியாவில் உள்ள ஒரு ஓட்டலில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார். அடுத்த 2 நாட்களில் இலங்கைக்கு அவர் கொண்டு வரப்பட்டார். போலீஸ் விசாரணையின்போது அவர் அரசு ஆதரவாளராக மாறினார்.

இதைத் தொடர்ந்து கிளிநொச்சியில் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டு இருந்த குமரன் பத்மநாதன் அங்கிருந்தபடியே போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இல்லம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

இதனால், குமரன் பத்மநாதனை விசாரணைக்காக தங்கள் வசம் ஒப்படைக்கும்படி இலங்கை அரசை இந்தியா கேட்டுக் கொண்டது. எனினும் இலங்கை அரசு அவரை இந்தியா வசம் ஒப்படைக்கவில்லை.

இதனிடையே, நேற்று முன்தினம் இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் ராஜபக்சே தோல்வியைத் தழுவினார்.

இந்த நிலையில், குமரன் பத்மநாபன் நேற்று கொழும்பு நகரில் இருந்து விமானம் மூலம் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டதாக இலங்கை அரசு நேற்று தெரிவித்தது.

இதுபற்றி அதிபர் சிறிசேனா கட்சியின் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான ரஜிதா சேனரத்னா கூறும்போது, ‘‘விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் அறையில் இருந்து குமரன் பத்மநாதன் வெளிநாட்டுக்கு தப்பி விட்டதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். அவர் தப்பி ஓடியது தொடர்பாக விசாரணை நடத் தப்பட்டு வருகிறது’’ என்றார்.

எனினும் அவர் எந்த நாட்டுக்கு தப்பிச் சென்றார் என்ற தகவல் தெரிய வரவில்லை.

சிறிசேனா தலைமையிலான புதிய அரசு தன்னை கைது செய்து விசாரணைக்காக இந்தியா வசம் ஒப்படைக்கும் என்று கருதி இலங்கையில் இருந்து குமரன் பத்மநாதன் தப்பியோடி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

இந்த நிலையில் கிளிநொச்சி யில் உள்ள அவரது ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு குமரன் பத்மநாதன்  போன் மூலம் பேட்டியளிதுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

நான் இலங்கையில்தான் இருக்கிறேன். வேறு எந்த நாட்டுக்கும் செல்லவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் எனக்கு வழங்கப்படும் ராணுவ பாதுகாப்பு குறைக் கப்படவில்லை.
போரினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நான் ஆற்றி வரும் மனித நேய பணிகளை தொடர்வதற்கு புதிய அரசு  அனுமதித்தால் இறைவனுக்கு நன்றி சொல்வேன். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசின் நடவடிக்கைகள் எனக்கு எதிராக இருக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.
இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

இதனிடையே குமரன் பத்மநாபனிடம் விசாரணை நடத்த இலங்கையின் புதிய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து சிறிசேனாவின் பிரசார மேலாளர் மங்கல சமர வீரா கூறியதாவது:-

ராஜபக்சே அரசுடன் குமரன் பத்மநாபன் செய்து கொண்ட ரகசிய ஒப்பந்தம் குறித்தும், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், பணம் ஆகியவை எங்கே போனது என்பது பற்றியும் அவரிடம் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக