18

siruppiddy

ஆகஸ்ட் 10, 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்றுமுன் பதவியினை துறந்தார்

முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க சற்றுமுன் தனது அமைச்சு பதவியினை இராஜனாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டத்தொகுதியில் 
இடம்பெற்றுவரும் கூட்டத்தில் கலந்துகொண்டு விசேட உரையாற்றுகையிலேயே முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு 
தெரிவித்தார்.
அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்குடன் தான் தனது அமைச்சுப்பொறுப்பில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக