18

siruppiddy

ஏப்ரல் 18, 2018

புதுக்குடியிருப்பில் இராணுவச் சிப்பாயிடம் கொதித்தெழுந்த யுவதி

இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும் தமிழ் யுவதி ஒருவருக்கும் இடையில் கடும் கருத்து மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இராணுவச் சிப்பாய் ஒழுங்கு மாறாக நடந்துகொள்ள முற்பட்டதனாலேயே இந்த கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பில் உள்ள இலங்கை வங்கி ஏ.டி.எம் இயந்திர சேவையை பெற்றுக்கொள்ள மக்கள் சிலர் வரிசையில் காத்திருந்தனர்.இதன்போது குறித்த யுவதியும் 
மக்களோடு மக்களாக பின் வரிசையில் காத்திருந்துள்ளார். இந்த நிலையில் முன்வரிசையில் நின்ற மக்கள் தொகை குறைவடைய அடுத்ததாக யுவதியின் சந்தர்ப்பம் வந்தது. இதன்போது இராணுவச் சிப்பாய் ஒருவர் யுவதிக்கு குறுக்காக முந்திச் சென்று குறித்த இயந்திரத்தில் பணம்
 எடுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த யுவதி குறித்த இராணுவச் சிப்பாய் பணம் எடுத்துக்கொண்டு திரும்பியபோது “நாங்களும் இதுக்குதான் நிற்கின்றோம்” என்று அவரைப் பார்த்து கோவத்துடன் கூறியுள்ளார்
.இதனையடுத்து குறித்த இராணுவச் சிப்பாயும், “எனக்காக கொமாண்டர் காத்துள்ளார்” என்று தமிழில் பதிலளித்துள்ளார். இதற்கு பதிலளித்த யுவதி, “எனக்கும் எங்கள் கொமாண்டர் காத்திருக்கிறார்” என்று திடுமெனக் 
கூறியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த யுவதி யாரைக் கொமாண்டர் என்று கூறுகின்றார் என்று குழம்பிய இராணுவச் சிப்பாய் மேலும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளார். இதன்பின்னர் அவ்விடத்தில் நின்ற ஏனையோரால் குறித்த கருத்து மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக