இறுதி யுத்தத்தின் பின்னராக பத்து வருடங்களின் (2009) பின் கிளிநொச்சி டிப்போ சந்தியில் மாவீரர் வளைவு நாட்டி நிமிர்த்தப்பட்டுள்ளது.ஏ-9 வீதியில் நாட்டப்பட்டுள்ள குறித்த வளைவினை
தென்னிலங்கை பயணிகளும் பிரமிப்புடன் பார்த்துச்செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.இதனிடையே யாழ்.முன்னணி பாடசாலைகள் சிலவற்றின் முன்னதாகவும்
இன்று மாவீரர் தின அலங்காரங்கள்,பதாதைகள் கட்டி வைக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது
.இதனிடையே பெரும்பாலான பாடசாலைகளில் இன்று காலை மாவீரர்களிற்கான மாணவர்களின் வணக்கம் செலுத்தப்பட்டு கற்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக