திருகோணமலையில் இராணுவத்தளம் அமைப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாரள் நான்சி வான் ஹோர்ன் தெரிவித்துள்ளார்.திருகோணமலையில் இராணுவத்தளம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்காவுக்கு
இலங்கை அரசாங்கம்
அனுமதியளிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது .இந்நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாளர் , “இலங்கையில் இராணுவத்தளத்தை நிறுவுவதற்கு அமெரிக்கா முயற்சித்து வருவதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை
என கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்க – இலங்கை இராணுவ ஒத்துழைப்பானது, அனர்த்த தயார் நிலை, நிவாரணம், கடல் பாதுகாப்பு பயிற்சி, மற்றும் பயிற்சிகளை வலுப்படுத்தல் ஆகியவற்றை
உள்ளடக்கியதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.அதல்லாமல் , அமெரிக்காவின் தளம் ஒன்றை அமைப்பது, அதன் ஒரு அங்கமாக இருந்ததில்லை என்றும், இதனை நிறுவுவது தொடர்பாக கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக