யாழ்ப்பாணம் – நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் அரச விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 147 பேரின் 25ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (09) மாலை அனுஷ்டிக்கப்பட்டது.
இராணுவம் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தும் விதமான கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தேவாலயத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியிலும் ஆலயத்துக்கு உள்ளும் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு
அஞ்சலி செலுத்தினர்
>>>>>>>>>>>>>>>
யாழ் நவாலி ஆலய படுகொலையின் 25ம் ஆண்டு நினைவுநாள் இன்று
>>>>>
யாழ் நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயம் மீதான விமானத் தாக்குதலில் 147 பேர் படுகொலை செய்யப்பட்ட 25ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
199ஆம் ஆண்டு இதே மாதம் 9ம் திகதியன்று நவாலி பீட்டர்ஸ் தேவாலயத்தில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப் படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசி 147 பேரை
படுகொலை செய்தது.
இந்த படுகொலை நினைவேந்தலை இன்று அனுஷ்டிக்கவிருப்பது தொடர்பில் எம்.கே. சிவாஜிலிங்கம் புலிகளை மீள உருவாக்க முயற்சிக்கிறார் என்று கூறி பொலிஸார் முன்வைத்த தடை கோரிய மனுவை மல்லாகம் நீதிமன்றம் நேற்று (08) நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக