18

siruppiddy

ஜூலை 09, 2020

கிரான் மற்றும் வெருகல் பிரதேச மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

 கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தொழில் பாதிப்புக்குள்ளான கிரான் மற்றும் வெருகல் பிரதேச மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கான உலருணவு பொதிகளும், மரக்கறி கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன .

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், வைத்தியசாலைகளில் சிறுவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் சிறுவர் பிரிவுகளுக்கும் உதவும் வகையில் மலேசியா தமிழர் பேரவையின் நிதி உதவியுடன், செரன்டிப் சிறுவர் இல்லம் மற்றும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் உதவிகளை வழங்கி வருகின்றனர் .


அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்த தொழில் செய்பவர்களில் தொழில் பாதிப்புக்குள்ளானவர்களில் தெரிவு

 செய்யப்பட்டவர்களுக்கும், திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று, வெருகல் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் தொழில் பாதிப்புக்குள்ளான விசேட தேவையுடையவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை கல்வி மேம்பாட்டுக்கான கனடா அமைப்பின் உதவியின் கீழ் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் தெரிவு செய்யப்பட குடும்பங்களுக்கு மரக்கறி கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிவாரண உதவிகளை கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ் பாபு, உதவி பிரதேச செயலாளர் எஸ் .யோகராஜா, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக உளவள துறை பிரிவு

உத்தியோகத்தர் விக்னேஸ்வரி பிரதீபன், விவசாய பிரிவு உத்தியோகத்தர்கள், கல்வி மேம்பாட்டுக்கான கனடா அமைப்பின் மாவட்ட பொருளாளர் எம்.ஷிராணி, சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் ஜெகதேவன் ஜெரோன் ஆகியோர்
கலந்துகொண்டு இந்த உதவிகளை வழங்கி வைத்தனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக