18

siruppiddy

ஆகஸ்ட் 31, 2021

நாட்டில் சீனிக்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடு நீண்ட வரிசையில் மக்கள்

இலங்கையில் சீனிக்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.இந்நிலையில் சதொசயில் விற்பனை செய்யப்படும் சீனியை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.அமைச்சர் லசந்த அழகியவண்ண வெளியிட்ட தகவலை அடுத்து சதொசயில் சீனியின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதுவரையில் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி, தற்போது 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுஅதற்கமைய...

மே 25, 2021

கடைகளை கிளிநொச்சியில் மூடிய சிறிலங்கா காவல் துறை

  கிளிநொச்சி நகரில், 25-05-2021.இன்றைய தினம் திறக்கப்பட்ட வியாபார நிலையங்களில், அத்தியாவசிய வியாபார நிலையங்களை தவிர ஏனையவற்றை காவல் துறை  உடனடியாக மூடியுள்ளனர்.இன்றைய தினம் அதிகாலை, பயண கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில், கிளிநொச்சி நகரில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன.பொதுமக்களும் வழமை போன்று நகருக்கு வருகை தந்திருந்தனர். ஆனால், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களைத் தவிர ஏனையவற்றை திறப்பதற்கு...

சர்வதேச அரங்கில் தமிழர்களின் உரிமை தொடர்பாக குரல் கொடுத்தால் அது பயங்கரவாதமாம்

 தமிழ் மக்களின் நீதி மறுப்பு, தமிழர்களின் உரிமை தொடர்பாக சர்வதேச அரங்கில் குரல் கொடுத்தால் அது பயங்கரவாதம், ஆனால் முதலீடு என்ற பெயரில் சர்வதேச நாடுகள் இலங்கையை துண்டாடுவது தேசியவாதம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய துறைமுகங்கள் சட்டமூலம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த...

ஏப்ரல் 24, 2021

முன்னாள் அமைச்சர் ரிஷாத் எம்.பி.யின் கைது குறித்து மனோ

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.24-04-2021. இன்று கைதானமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநூலில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.‘நாடாளுமன்ற உறுப்பினர், கட்சித் தலைவர் நண்பர் ரிஷாத் பதியுதீனை இந்த ரமழான் மாதத்தில் ‘அதிகாலை 3 மணி’ க்கு வீடு புகுந்து, தலைமறைவாக வாழும் பாதாள உலகக் கேடியை இழுத்துச் செல்வதைப் போல் கைது செய்ததன் பின்னுள்ள ‘ஆவேசம்’ என்ன? ராஜபக்ஷ அரசின் கொடூர ராணுவ முகம் வெளிப்படுகிறதா?’ எனப் பதிவிட்டுள்ளார்....

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்தும் சகோதரரும் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் சிஐடியினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.அவரது சகோதரரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பவுத்தலோக மாவத்தை வெள்ளவத்தையில் உள்ள வீடுகளி;ல் வைத்து இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைகுண்டுதாரிகளிற்கு உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.சந்தேகநபர்களிற்கு எதிராக உறுதியான ஆதாரங்களை சிஐடியினர் பெற்றுக்ககொண்டுள்ளனர்...

ஏப்ரல் 19, 2021

யாழில் இலங்கை படைகளில் கூலியாட்களாக தமிழர்கள்

இலங்கை இராணுவத்தில் கூலி வேலைகளிற்கு ஆட்சேர்ப்பதில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தது 1,600 தமிழ் இளைஞர்கள் மூன்று மாத காலத்திற்குள் இணைந்துள்ளனர்.இலங்கை இராணுவத்தில் அவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத் தலைமையகத்தில் பாதுகாப்புப் படை அதிகாரிகளை உரையாற்றும் போது அவர் இதை வெளிப்படுத்தினார்."பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக மக்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதை நாங்கள் இன்னும் காண்கிறோம்....

ஏப்ரல் 18, 2021

யாழ்.தெல்லிப்பழை புற்றுநோய் கதிரியக்க நிபுணர்கள் கூட்டாக சேர்ந்து மோசடி

வவுனியா வடக்கு கல்வி வலய மோசடியை தொடர்ந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நடந்தேறிய மோசடியை மூடி மறைக்க சுகாதார துறை மும்முரமாகியுள்ளது.புற்றுநோயுடன் உயிருக்காக போராடும் நோயாளிகளிற்கான கதிர்வீச்சு சிகிச்சையினை உரிய காலத்தில் வழங்காது அவ்வாறு வழங்கியதாக பொய் கணக்கு காண்பித்து மில்லியன் கணக்கில் மோசடி அரங்கேறியுள்ளது.உரிய சிகிச்சையின்றி நோயாளிகள் தொடர்ச்சியாக உயிரிழந்த போதும் அதனை கண்டு கொள்ளாது கதிரியக்க நிபுணர்கள் கூட்டாக சேர்ந்து மோசடி செய்தமை...

ஏப்ரல் 11, 2021

வாழைச்சேனையில் மணல் ஏற்றி வந்த 25 சந்தேக நபர்கள் கைது

வாழைச்சேனை காவற்துறை பிரிவில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த இருபத்தைந்து (25) சந்தேக நபர்களும், இருபத்தைந்து (25); வாகனங்களும்.11-04-2021. இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.வாழைச்சேனை காவற்துறை பிரிவிற்குட்பட்ட வாகனேரி, பொத்தானை, புலிபாய்ந்தகல், ஒமடியாமடு, ஊத்துச்சேனை, வெள்ளாமைச்சேனை, மற்றும் புணாணை ஆகிய பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வருவதாக வாழைச்சேனை...

மார்ச் 27, 2021

சர்வதேச விசாரணையில் இருந்து சிறிலங்காவை காப்பாற்றியது யார்

இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் போன்ற ஈழத்தமிழர் முன்வைத்த பிரதான கோரிக்கைகளை நீக்கம் செய்து சிறிலங்காவை  காப்பாற்றியது ஐ.நா மனித உரிமைகள் பேரவை-என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , “இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல்...

பிப்ரவரி 25, 2021

சிறிலங்கா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தந்திரோபாயமொன்றை முன்வைக்கவேண்டும்

  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தந்திரோபாயத்தினை இலங்கை முன்வைக்கவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.ஜெனீவாவிற்கான அமெரிக்க தூதரகத்தின் டானியல் குரென்பீல்ட் இதனை தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தந்திரோபாயத்தினை இலங்கை முன்வைக்கவேண்டும் அதற்கான கால அட்டவனையொன்றை முன்வைக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஐக்கியநாடுகள்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இறுதி அறிக்கை சட்டமா அதிபருக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் முதல் பிரதி சட்டமா அதிபருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி செயலாளரால் குறித்த அறிக்கை,25-02-2021. இன்று சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகச் சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதி காரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜெயரத்ன தெரிவித்தார்.இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் மற்றும் ஆணைக்குழுவின் அறிக்கையின் ஏனைய (2-5)...

ஜனவரி 28, 2021

கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு - கிழக்கில்

சிறீலங்காவின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கடைப்பிடித்து கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் அடையாள உணவு தவிர்ப்பு மற்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை எதிர்வரும் 2ஆம் திகதி ஆரம்பித்து 6ஆம் திகதிவரை நடத்த போவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அறிவித்துள்ளது நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>&...

சிறீலங்காக்கு காத்திருக்கும் ஆபத்து மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளதுஇதன்போது  சிறீலங்கா தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை 27-012021.நேற்று ஐக்கிய நாடுகள் சபையினால் பகிரங்கப்படுத்தப்பட்டது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு ...

ஜனவரி 24, 2021

தமிழ்த் தலைமைகள் வடக்கில் ஒன்றுக்கூடினார்கள்

தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று.24.01-2021. இன்றையதினம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. மதத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இந்தக் கலந்துரையாடிலின் நோக்கமாகும். வடக்கு - கிழக்கில் தமிழரின்...

ஜனவரி 18, 2021

இலங்கை நாடாளுமன்ற பீதி தீர்ந்தபாடாகவில்லை?

இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் பிரகாரம், நாடாளுமன்ற பணியாள் தொகுதி, பாதுகாப்புப் பிரிவு, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே இருக்குமு் பாதுகாப்பு வலயம், இணைந்த சேவையில் இருப்போர் என ஒன்பது கொவிட்-19 நோய் தொற்றியிருப்பது உறுதியானது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள்...

மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக

வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரிய இடமாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து.சுகவீன விடுமுறையை அறிவித்து இன்று திங்கட்கிழமை(18) முற்பகல்-10 மணி முதல் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தனர்.இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற  மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த...