நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இண்டிகோ ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானமொன்று, 179 பயணிகளுடன் நேற்று மதியம் பகல் 12.57 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து திப்ரூகருக்கு புறப்பட்டது.
விமானம் கிட்டத்தட்ட 30,000 அடி உயரத்தைத் தொட்டபோது, முன்புறக் கண்ணாடியில் விரிசல் இருந்ததை விமான ஓட்டிகள் கவனித்தனர்.
விரிசலோடு பயணத்தைத் தொடர்ந்தால் விபத்து ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விமானிகள், கண்ணாடி உடைவதைத் தவிர்ப்பதற்காகவும், உயரத்தினால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும் உடனடியாக கொல்கத்தா திரும்ப தீர்மானித்தனர்.
விமானத்தின் திடீர் ஆட்டம், பயணிகளிடம் அச்சத்தை உண்டாக்கியது.
இதனால் தொழில்நுட்பக் குறைபாடு காரணமாகவே விமானம் கொல்கத்தா திருப்பப் பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
1.59 நிமிடத்திற்கு பிறகு, விமானம் பத்திரமாக கொல்கத்தாவில் தரை இறங்கியது.
பின்னர் பயணிகள் மாற்று விமானம் மூலம் மாலை 3.32 மணி அளவில் திப்ரூகர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக