18

siruppiddy

ஜூலை 08, 2013

UNP பேசஅழைத்தது- வடக்கு தேர்தலில் KP தயாமாஸ்ரர்


இறங்கினாலும் தோல்வியே விநாயகமூர்த்தி தயாமாஸ்டரை UNP பேசஅழைத்தது- வடக்கு தேர்தலில் KP தயாமாஸ்ரர் இறங்கினாலும் தோல்வியே விநாயகமூர்த்தி
வடக்கு தேர்தலிற்கு முன்னதாக ரணில் விக்கிரமசிங்கவே தயாமாஸ்டருடன் கதைக்க விரும்பியிருந்தார். ஒரு முன்னாள் பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் என்ற வகையினில் நானே அவருக்காக தயாமாஸ்டருடன் தொடர்பு கொண்டு பேசியுமிருந்தேன். எனினும் தயா மாஸ்டர் ரணிலுக்கு பதிலுக்கு தொலைபேசி அழைப்பு எதனையும் எடுத்திருக்கவில்லை என தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி.
இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் அண்மையில் குடாநாட்டிற்கு சென்றிருந்த ரணில் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்திருந்தார். அவ்வகையில் என்னையும் சுன்னாகத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில்; சந்தித்திருந்தார். தான் தமிழ் அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாகவும் டக்ளஸையும் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்த அவர் தயாமாஸ்டரையும் சந்திக்க ஆர்வம் கொண்டுள்ளதாகவும் எனினும் அவர் தொலைபேசி அழைப்புக்களிற்கு பதிலளிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து  ஒரு முன்னாள் பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் என்ற வகையில் அவருடன் உரையாட நானே தயாமாஸ்டருடன் தொடர்பு கொண்டு பேசியுமிருந்தேன். எனினும் தயா மாஸ்டர் ரணிலுக்கு தொலைபேசி அழைப்பு எதனையும் எடுத்திருக்கவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் கொழும்பில் ஜ.தே.க நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தம்முடன் இணைந்து போட்டியிட தயாமாஸ்டர் விரும்பியிருந்ததாக அறிவித்ததனை தான் பின்னதாகவே அறிந்து கொண்டதாகவும் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
இதனிடையே மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர் தயாமாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் ஆகியோருக்கான வழக்குகளில் தானே நீதிமன்றில் வாதாடிவருவதாக தெரிவித்த அவர் தயாமாஸ்டர் கேபி என எவர் வந்தாலும் அனைவருமே வடமாகாணசபை தேர்தலில் மண்ணையே கௌவுவார்களென தெரிவித்தார். அவர்களது வெற்றி வாய்ப்பு நூற்றிற்கு பூச்சியமேயென அவர் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களது ஆத்மாக்கள் துரோகமிழைப்பவர்களை சும்மாவிடாதெனவும் அவர் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக எவர் இருப்பினும் பெரும்பான்மை வெற்றியைப்பெறுமென தெரிவித்த அவர் ஆரம்பங்களில் தயாமாஸ்டர் போன்றவர்களை கூட்டமைப்பிற்குள் இணைத்துக்கொள்வது பற்றி மாவையிடம் எடுத்துக்கூறியிருந்த போதும் அவர் அக்கறை காட்டியிருக்கவில்லை என தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக