18

siruppiddy

செப்டம்பர் 14, 2014

போராடுவோம் ,திரு வேல்முருகன் அவர்களின் ஐநா பேரணிக்கான அழைப்பு!!

 தாயகத்திலும் , தமிழகத்திலும் , புலத்திலும் ஒன்றிணைந்து போராடுவோம் .விடுதலைப் போராட்டத்துக்கு மாவீரர்களை கொடுத்த தமிழ் உறவுகளே , குடும்பம் குடும்பமாக ஐநா பேரணியில் பெரும்திரளாக கலந்து கொள்ளுங்கள் . எமக்கான தேசத்தை நாம் பெறுவதுக்கு தொடர்ந்து போராடுவோம் என ஐநா பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

செப்டம்பர் 10, 2014

போராடுங்கள்!நாங்கள் துணையிருப்போம்! மனோ கணேசன்

 'தமிழரசு தலைவராக பதவியேற்றுள்ள மாவை சேனாதிராசாவுக்கு வாழ்த்துக்களுடன் இரண்டு யோசனைகளை முன்வைக்க விரும்புகின்றேன். முதலாவது, வடக்கு, கிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், முஸ்லிம் மக்கள், புலம் பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டு ஆதரவு சக்திகள், சிங்கள முற்போக்கு சக்திகள் ஆகிய ஆறு தரப்பினரையும் கூட்டிணைக்கும் பொறிமுறை ஒன்றை தோற்றுவியுங்கள். இரண்டாவது, 1960 களில் தந்தை செல்வா காலத்தில் தமிழரசு கட்சி முன்னெடுத்த அறவழி போராட்ட வரலாற்றை மீண்டும் இன்று எழுதுங்கள்' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

வடக்கு, கிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், முஸ்லிம் மக்கள், புலம் பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டு ஆதரவு சக்திகள், சிங்கள முற்போக்கு சக்திகள் ஆகிய ஆறு தரப்பினரையும்  ஒரு நேர்கோட்டில் கொண்டு வாருங்கள். இந்த தரப்புகளை அரவணைத்து கூட்டிணைக்கும் தோழமை பொறிமுறை ஒன்றை தோற்றுவியுங்கள். இந்த பொறிமுறை உள்நாட்டிலே கட்டாயமாக தேர்தல் கூட்டமைப்பாக  அமைந்திட வேண்டும் என்பது இல்லை.  அப்படி இருக்க கூடாது என்பதும் இல்லை. தேர்தல்களின் போது அவசியப்படுமானால் நாம் கூட்டாக முடிவுகள் எடுக்கலாம். 
ஆனால், இங்கே நான், தேர்தல் இலக்குகளுக்கு அப்பாற்பட்ட கூட்டிணைவு ஒன்றையே பிரேரிக்கின்றேன். முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியதை போல், பல்வேறு சிறு நிறுவனங்களை கூட்டிணைத்து பெரிய ஒரு நிறுவனத்தை உருவாக்குவது என்பது போன்றதாகும் இந்த யோசனை. இந்த இணைவு, சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. இனவாதத்துக்கு எதிரானது. சிங்கள மக்களுக்கு உண்மையை எடுத்து கூறும் இணைவாகும்.

இரண்டாவது, இங்கே விடுதலை புலிகளின் போராட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் கூறப்பட்டன.  புலிகளின் சரிகளையும் பிழைகளையும் பற்றி பேசப்பட்டன. ஒரு விடயத்தை  நாம் மனதில் கொள்ள வேண்டும். இன்று உலகம், சர்வதேச சமூகம், ஐ.நா. சபை என்று எம்மை திரும்பி பார்க்கின்றதென்றால், அதற்கு அடித்தளமிட்டது புலிகளின் போராட்டமே.  

போராடாமல் உலகம் எம்மை திரும்பி பார்க்காது. இலங்கை அரசின் மீது அழுத்தம் செலுத்துங்கள் என்று நாம் அமெரிக்காவையும் இந்தியாவையும் ஐ.நாவையும் கோருன்றோம். நாம் இங்கே தொடர்ச்சியாக போராடினால், அந்த போராட்டமே,  அமெரிக்காவையும் இந்தியாவையும் ஐ.நாவையும் செயற்படுத்தும் அழுத்தமாக மாறும். போராட்டம் என்றால் ஆயுதபோராட்டத்தை நான் இங்கே கூறவரவில்லை.

ஜனநாயக அறவழி போராட்டங்களை ஆரம்பியுங்கள் என்றே கூறுகின்றேன். 1960 களில் தந்தை செல்வா தலைமையில், தமிழரசுக் கட்சி முன்னெடுத்த அறவழி போராட்டங்களை திட்டமிட்டு மீண்டும் ஆரம்பியுங்கள். உலகம் எம்மை திரும்பி பார்க்கும். இலங்கை அரசுக்கு புரியும் பாஷையும் அதுதான்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளே, காத்திரமான  இந்த இரண்டு பணிகளையும்  உங்கள் தலைமையின் கீழ் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னெடுக்க வேண்டும். அதற்கு நாம் தோழமை கட்சி என்ற

 இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

செப்டம்பர் 09, 2014

ஆறு வாரத்துக்குள் பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்

 இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகள் ஆறு வாரத்துக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஞாயிறன்று முடிவடைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இறுதி நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இந்த நிபந்தனையை விதித்துள்ளார். அப்படியான பேச்சுவார்த்தையின் போது ஒரு சர்வதேச பிரசன்னமும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது, ´´பல அரசாங்கங்களுடனும் 60 வருடங்களாகப் பேசியிருக்கின்றோம். இனிமேல் பேசுவதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை. பேசப்பட்டவையெல்லாம் எழுத்தில் இருக்கின்றன. ஆகவே நீண்ட காலம் பேச்சுக்களை நடத்தவேண்டிய அவசியமில்லை. சுருக்கமாகப் பேசி பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். பேச்சுக்கள் நடத்துகின்றோம் என்று உலகத்திற்குக் காட்டுவதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் எமக்கு அவசியமில்லை. ஆக்கபூர்வமாகப் பேச வேண்டும். எமது நிலைப்பாட்டின்படி, ஆறு வாரத்திற்குள் பேச்சுக்களை நடத்தி தீர்வு காண வேண்டும்´´ என்றார்.
பத்து வருடங்களாகப் பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி, அனைத்துக் கட்சிகளையும் கூட்டிப் பேசி நிபுணர்களையும் அழைத்துப் பேசியிருக்கின்றார், அப்போது அவர் முற்போக்கான கருத்துக்களை வெளியிட்டிருந்தார் என்றும் கூறிய சம்பந்தன், அதன் அடிப்படையில் ஒரு தீர்வைக் காண்பதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகளின் போது என்ன நடந்திருக்கின்றது என்பதை தமிழ் மக்களும் உலகமும் அறிந்து கொள்வதற்காக, பேச்சுவார்த்தைகளின் போது ஒரு சர்வதேச பிரசன்னம் இருக்க வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
´´அரசாங்கம் சில சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்தத் தொடர்புகளின் மூலம், அவ்விதமான கருத்துக்கள் அரசாங்கத்துடன் பரிமாறப்பட்டிருக்கின்றன. எனவே, பேச்சுவார்த்தைகளில் ஒரு சர்வதேச பிரசன்னம் இருக்க வேண்டியது அவசியமாகும்´´ என்று அவர் கூறியுள்ளார்.
அறுபது வருடங்களாப் பேசியும் தீர்வு காண முடியாத பிரச்சினைக்கு ஆறு வாரத்தினுள் பேசி தீர்வு காண முடியும் என்று நம்பலாமா என கேட்டதற்கு, அங்கு பேசுவதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் அங்கே தெளிவாக இருக்கின்றன. விரும்பினால் இரண்டு பகுதியும் ஆறு வாரத்திற்குள் பேசி முடிக்கலாம் என்றார்.
அதேவேளை குறிப்பிட்ட ஒரு காலக் கெடுவுக்குள் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியதற்கு பதிலளிக்கும் வகையில் ஊடகங்களிடம் பேசிய இலங்கை அரசாங்க அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ´´அரசாங்கத்தை எவரும் பயமுறுத்தி அடிபணிய வைக்க முடியாது, இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாகவே பேச்சுக்கள் நடத்தப்படும், தனியே தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்கள் நடத்தப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ள கருத்து குறித்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கேட்டபோது, அவருடைய கூற்று அர்த்தமற்றது என்று நிராகரித்தார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

செப்டம்பர் 08, 2014

மாநாட்டில் சிறீலங்காவுக்கு மற்றொரு சவால்!!

இன்று ஆரம்பித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்கா அரசாங்கம் மற்றுமொரு பாரிய சவாலை எதிர்கொள்ளவுள்ளது.
சிறிலங்காவின் சர்வதேச சட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் பல அறிக்கை படுத்தவுள்ளன.
ஏற்கனவே இந்த முறை சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான வாய்மூல அறிக்கை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் புதிதாக சிறிலங்காவில் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகளால் காணாமல் போனோர் தொடர்பான அறிக்கைகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் சமர்ப்பிக்கவுள்ளன.
காணாமல் போதல், காணாமல்போதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதிருத்தல், காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு தீர்க்கமாக செயற்படாமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள், இதன் கீழ் முன்வைக்கப்படவுள்ளன.
ஏற்கனவே சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களில் இது தொடர்பான தங்களின் ஆதாரங்களையும், அறிக்கைகளையும் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சிறிலங்காவில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள், போர்க்குற்ற சாட்சிகள் அச்சுறுத்தப்படுதல் போன்ற விடயங்கள் குறித்தும் அறிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

செப்டம்பர் 05, 2014

சரத் பொன்சேகா சாட்சியமளிக்கத் தயார் !!

 
வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்தவர்களை சுட்டுக் கொல்லுமாறு நான் உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை -
மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை ஏற்க தான் தயாரென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணையோன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே முன்னால் இராணுவத் தளபதி இவ்வாறு கூறினார்.
தான் தலைமை வகித்த இராணுவம் சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமையவே யுத்தத்தில் ஈடுபட்டதாகக் கூறிய சரத் பொன்சேகா, வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்தவர்களை சுட்டுக் கொல்லுமாறு தான் உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இவ்வாறான விசாரணையோன்றுக்கு முகம் கொடுக்க நான் தயங்க மாட்டேனென்று கூறிய அவர், இலங்கை இராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை என்று நிருபிக்க தான் தயாரென்றும் தெரிவித்தார்.

எனவே சர்வதேச விசாரணைக் குழுவுக்கு இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கமாட்டோம் என்று அரசாங்கம் கூறியுள்ள கருத்தை தனக்கு ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச விசாரணைக்கு முகம் கொடுக்க அரசாங்கம் தயக்கம் காட்டி வருவது ஏன் என்று கேள்வி எழுப்பிய சரத் பொன்சேகா, குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் மாத்திரமே இவ்வாறு தயக்கம் கட்டுவதாக தெரிவித்தார்.

மேலும் கருத்துக்களை தெரிவித்த முன்னாள் இராணுவத் தளபதி சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் தான் அதனை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
இந்த விசாரணையின் போது சாட்சியங்களை வழங்கும் நபர்கள் அதற்கான பிரதிபலன்களை முகம் கொடுக்க நேரிடுமென அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூட அண்மையில் இவ்வாறான கருத்தை முன்வைத்திருந்தார்.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

செப்டம்பர் 04, 2014

அரசியல் சாயம் பூசவேண்டாம் வெளிநாட்டு உதவிகளுக்கு

பாதிக்கப்பட்ட எங்களுக்கு அமெரிக்க மக்களால் பல விதமான நன்மைகளைத் தரும் பொழுது அதற்கு எந்தவிதமான அரசியல் நிறங்களையும் பூசி கொச்சைப்படுத்தாது இருக்க வேண்டும் என வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று காக்கைதீவில் அமெரிக்க உதவியுடன் ஏலவிற்பனை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் அங்கு உரையாற்றும் போது:
அமெரிக்க அரசு எமக்கு பல வழிகளிலும் பல வருடங்களாக உதவிகளைச் செய்து வருகின்றனர். நான் அரசியலுக்கு வர முன்னரே அவர்களோடு சேர்ந்து பல செயற்றிட்டங்களில் பங்குபற்றியிருந்தேன்.சட்டத்தரணிகள், நீதிபதிகள் மற்றும் வேறு பலருக்கு சட்டம் சம்பந்தமான  பயிற்சிகளும் வழங்க அவர்களுக்கு உதவி செய்து கொண்டு இருந்தேன்.
ஆனால் அவர்கள் இங்கு வாழ்வாதார மேம்பாடுகள் தொடர்பிலான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது மிகவும் மகிழ்ச்சியான விடயம்.
நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள். எமக்கு பல விதமான தேவைகள் உள்ளன. அவற்றை நல்குவதற்கு வெளிநாடுகளில் இருந்து பலர் முன் வந்துள்ளனர். இவ்வாறு வழங்குகின்ற போது வடக்கிற்கு மட்டும் வழங்குகின்றார்கள் ஏன் தென்பகுதிக்கு வழங்குகின்றார்கள் இல்லை என விமர்சனங்கள் ஏற்படுவது மனதிற்கு வேதனையளிக்கின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் நன்மை தேவை மற்றவர்களுக்கு அல்ல. ஆகவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு அமெரிக்க மக்களால் பல விதமான நன்மைகளைத் தரும் பொழுது அதற்கு எந்தவிதமான அரசியல் நிறங்களையும் பூசி கொச்சைப்படுத்தாது இருக்க வேண்டும் என்று அரசுடன் சம்பந்தப்பட்ட சிலருக்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

செப்டம்பர் 01, 2014

மஹிந்தவை கட்டுப்படுத்த முடியும் என பிரபாகரன் கருதினார்–


 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கட்டுப்படுத்த முடியும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் கருதினார் என முன்னாள் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் கே. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

துரித கதியில் ஈழத்தை எட்டுவதற்கு தேவையான சூழலை அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில், பிரபாகரன் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய ஜனாதிபதியினால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளில், தமக்கு சாதக நிலைமை ஏற்படும் என புலிகள் கருதியதாகத் தெரிவித்துள்ளார்.

உண்மை மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி குறித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தப்புக் கணக்கே அவர்களின் பாரிய பின்னடைவிற்கான ஏதுவாக அமைந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்கக் கூடாது என தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

வடக்கு மக்கள் வாக்களிப்பில் பங்கேற்காமையே, ரணில் விக்ரமசிங்க தேர்தலில் தோல்வியை சந்திக்க ஏதுவாக அமைந்தது என ஐக்கிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

வன்னி கிழக்கு முன்னரங்கப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்திருந்தால் சிவிலியன் இழப்புக்களை தவிர்த்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த வலயத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை பாதுகாக்க மேற்குலக நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும், இதனால் இழப்புக்கள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்திருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாரியளவில் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்நோக்க தமிழீழ விடுதலைப் புலிகளே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்னி கிழக்கு முன்னரங்கப் பகுதிகளில் இலங்கை அரச படையினர் பின்பற்றிய யுத்த தந்திரோபாயங்கள் பாரியளவில் இழப்புக்களை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேற்கு பகுதியில் ஒரு விதமான யுத்த தந்திரோபாயம் பின்பற்றப்பட்டதாகவும், கிழக்கு பகுதியில் வேறும் ஓர் தந்திரோபாயம் பின்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

2008ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கிளிநொச்சியிலிருந்து வெளியேறியிருக்கக் கூடாது எனவும் அரசாங்கத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு மக்களுக்கு சேவையாற்றியிருக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்னிக் கிழக்கு முன்னரங்கப் பகுதியில் யுத்த சூன்ய வலயம் அறிவிப்பது குறித்து புலிகளுடன் அரசாங்கம் எவ்வித கலந்தாலோசனையையும் நடத்தவில்லை எனவும், இவ்வாறு தன்னிச்சையாக அரசாங்கம் யுத்த சூன்ய வலயம் பற்றி அறிவித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாம் யுத்த சூன்ய வலயத்தை புலிகள் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில் மற்றுமொரு யுத்த சூன்ய வலயத்தை அரசாங்கம் எதன் அடிப்படையில் அறிவித்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யுத்த வலயத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை பாதுகாக்க இராணுவத்தினர் எடுத்த முயற்சிகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக வைத்தியசாலைகள் உள்ளிட்ட முக்கிய நிலைகள் மீது படையினர் நடத்திய தாக்குதல்களை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்hளர்.

ஆளில்லா உளவு விமானங்களின் மூலம் கள நிலவரங்களை அறிந்து கொண்டே படையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்.