இன்று ஆரம்பித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்கா அரசாங்கம் மற்றுமொரு பாரிய சவாலை எதிர்கொள்ளவுள்ளது.
சிறிலங்காவின் சர்வதேச சட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் பல அறிக்கை படுத்தவுள்ளன.
ஏற்கனவே இந்த முறை சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான வாய்மூல அறிக்கை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் புதிதாக சிறிலங்காவில் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகளால் காணாமல் போனோர் தொடர்பான அறிக்கைகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் சமர்ப்பிக்கவுள்ளன.
காணாமல் போதல், காணாமல்போதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதிருத்தல், காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு தீர்க்கமாக செயற்படாமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள், இதன் கீழ் முன்வைக்கப்படவுள்ளன.
ஏற்கனவே சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களில் இது தொடர்பான தங்களின் ஆதாரங்களையும், அறிக்கைகளையும் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சிறிலங்காவில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள், போர்க்குற்ற சாட்சிகள் அச்சுறுத்தப்படுதல் போன்ற விடயங்கள் குறித்தும் அறிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக