ஏமாற்றி தற்போது வாக்குகளை சுவீகரிக்கும் படலம் தொடர்கின்றது.வரவிருக்கும் மாகாண சபை தேர்தலை முன்னிட்டு அதிகலவிலான போலித்தனங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
முதற்கட்ட செயற்பாடாக ஏற்கனவே ஒரு வருடங்களுக்கு மேலாக பாவனையில் உள்ள சுமார் 8 வீதிகள் கழுவப்பட்டு சோடிக்கப்பட்டு புதிது போன்று திறக்கப்பட்டுள்ளது.
இதனை வழமை போல் தேர்தல் காலங்களில் செய்யும் அமைச்சரே முன்னின்று செய்துள்ளார்.
இவ்விடையங்கள் தொடர்பில் மன்னார் நகர,பிரதேச சபைகளிடம் அனுமதியோஅதன் மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கவோ,தெரியப்படுத்தவோ இல்லை.
குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள சபைகளின் எல்லைக்குற்பட்ட பகுதிகளில் போலியான வித்தைகளை அமைச்சர் செய்துள்ளார்.
அங்கிகரிக்கப்பட்ட மடு மாதா திருவிழாவின் அன்றைய தினமே தனது வருகைக்காக மக்களை பல மணி நேரம் காக்க வைத்து தனது தேர்தல் கபட நாடகத்தை நடாத்தி பழைய வீதிகளை திறந்து மக்களை விசனமடையச் செய்த அமைச்சரின் செயல் கண்டணத்திற்கூறியது.
இவை மாத்திரமல்ல வேலை வாய்ப்பபுகளிலும் தகுதியான ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் இருக்கையில் தகுதியற்ற தனக்கு தேர்தல் வேலை செய்தவர்களுக்கு மட்டும் சமூர்த்தி மற்றும் சிற்றூழியர் நியமனங்களை வழங்கியதும் அனைத்து மக்களையும் விசனமடையச் செய்துள்ளது.மக்களின் வரிப்பணத்திலும்,
பாதீக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகள் கொடுக்கும் உதவிகள் மூலம் செய்யப்படுகின்ற அபிவிருத்தி வேலைகள் தனது தயவில் கிடைத்தது போன்று காட்ட முற்படுகின்ற அமைச்சருக்கு மக்கள் தாம் முட்டாள்கள் இல்லை என்பதனையும் ஏமாற்றியவர்களை ஏமாற வைப்பதற்கும் மக்கள் தயாராகியுள்ளனர் என்பதனை அமைச்சருக்கு கூறி வைக்க விரும்புவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,
0 கருத்துகள்:
கருத்துரையிடுக