ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கட்டுப்படுத்த முடியும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் கருதினார் என முன்னாள் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் கே. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
துரித கதியில் ஈழத்தை எட்டுவதற்கு தேவையான சூழலை அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில், பிரபாகரன் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய ஜனாதிபதியினால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளில், தமக்கு சாதக நிலைமை ஏற்படும் என புலிகள் கருதியதாகத் தெரிவித்துள்ளார்.
உண்மை மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி குறித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தப்புக் கணக்கே அவர்களின் பாரிய பின்னடைவிற்கான ஏதுவாக அமைந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்கக் கூடாது என தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
வடக்கு மக்கள் வாக்களிப்பில் பங்கேற்காமையே, ரணில் விக்ரமசிங்க தேர்தலில் தோல்வியை சந்திக்க ஏதுவாக அமைந்தது என ஐக்கிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
வன்னி கிழக்கு முன்னரங்கப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்திருந்தால் சிவிலியன் இழப்புக்களை தவிர்த்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்த வலயத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை பாதுகாக்க மேற்குலக நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும், இதனால் இழப்புக்கள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்திருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாரியளவில் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்நோக்க தமிழீழ விடுதலைப் புலிகளே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வன்னி கிழக்கு முன்னரங்கப் பகுதிகளில் இலங்கை அரச படையினர் பின்பற்றிய யுத்த தந்திரோபாயங்கள் பாரியளவில் இழப்புக்களை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேற்கு பகுதியில் ஒரு விதமான யுத்த தந்திரோபாயம் பின்பற்றப்பட்டதாகவும், கிழக்கு பகுதியில் வேறும் ஓர் தந்திரோபாயம் பின்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
2008ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கிளிநொச்சியிலிருந்து வெளியேறியிருக்கக் கூடாது எனவும் அரசாங்கத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு மக்களுக்கு சேவையாற்றியிருக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வன்னிக் கிழக்கு முன்னரங்கப் பகுதியில் யுத்த சூன்ய வலயம் அறிவிப்பது குறித்து புலிகளுடன் அரசாங்கம் எவ்வித கலந்தாலோசனையையும் நடத்தவில்லை எனவும், இவ்வாறு தன்னிச்சையாக அரசாங்கம் யுத்த சூன்ய வலயம் பற்றி அறிவித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலாம் யுத்த சூன்ய வலயத்தை புலிகள் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில் மற்றுமொரு யுத்த சூன்ய வலயத்தை அரசாங்கம் எதன் அடிப்படையில் அறிவித்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
யுத்த வலயத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை பாதுகாக்க இராணுவத்தினர் எடுத்த முயற்சிகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக வைத்தியசாலைகள் உள்ளிட்ட முக்கிய நிலைகள் மீது படையினர் நடத்திய தாக்குதல்களை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்hளர்.
ஆளில்லா உளவு விமானங்களின் மூலம் கள நிலவரங்களை அறிந்து கொண்டே படையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக