18

siruppiddy

மார்ச் 14, 2015

ஆதரவாக குரல் கொடுக்கும் யேர்மனிய நண்பர்கள்

 
ஈழத்தமிழர்களின் இன அழிப்பை தடுத்து நிறுத்த ஒவ்வொரு தமிழனும் முன்வர வேண்டும் எனும் கோரிக்கையோடு  , யேர்மனிய இளையோர்கள் குரல் கொடுக்கின்றனர் . அவ் வகையில்
 எதிர்வரும் மார்ச் 16 திகதி நடைபெற இருக்கும் மாபெரும் பேரணிக்கு தமிழர்கள் அனைவரும் தமது தாயக உறவுகளை நெஞ்சில் பதித்து நீதி கேக்க ஜெனீவா செல்ல வேண்டும் என்று அறைகூவல் விடுகின்றனர் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மார்ச் 09, 2015

அடுத்தவாரம் ஜெயகுமாரிக்கு விடுதலை?

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயகுமாரி அடுத்த வாரம் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத் தரப்பு தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் சிறிலங்கா விஜயத்தை முன்னிட்டு அவர் விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுடனான நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மோடிக்கு காண்பிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மார்ச் 07, 2015

அமெரிக்கா நம்பிக்கை அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாம்!

இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை  நிறைவேற்றும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஜெனிவாவில் உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதி, இலங்கை அரசாங்கம் மனித உரிமைப் பேணல், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியனவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அளித்த வாக்குறுதிகள்
 நிறைவேற்றப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்ன் தலைமையேற்று மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அவர் வரவேற்றுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டமைக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம்  தெரிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சிறிலங்காவுக்கு ஊடகவியலாளர் சுனந்த மீண்டும் !!!

கடந்த அரசாங்க அட்சிக்க் காலத்தில் விடுக்கப்பட்டிருந்த உயிர் அச்சுறுத்தல் காரணமாக, நாட்டை விட்டுச் சென்று சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்த பிரபல ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய இம்மாதம் மீண்டும் 27ஆம் திகதி சிறிலங்கா திரும்புகிறார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கோரிக்கையை ஏற்று இவர் நாடு திரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மார்ச் 06, 2015

சர்வதேச அரங்கில் மங்கள சமரவீர சொன்னதை செயலில் காட்ட வேண்டும்-

 ஊடகவியலாளர் சுனந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா.மனித உரிமை பேரவையில் சர்வதேச நாடுகள் மத்தியில் கூறிய விடயங்களை செயல்படுத்தி காட்ட வேண்டும் என இலங்கை சுதந்திர ஊடக அமைப்பின் முன்னாள் பேச்சாளரும் ஊடகவியலாளருமான சுனந்த தேசப்பிரிய வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
ஜெனிவா ஐ.;நா.மனித உரிமை பேரவையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றிய உரை தொடர்பாக கேட்ட போதே சுனந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மார்ச் 04, 2015

அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் விசாரணை???

பசில் ராஜபக்சவை அழைத்து விசாரணை நடத்துவது அவ்வளவு சிரமமான விடயமல்ல என குறித்த அரசாங்கத்தின் 
பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மார்ச் 02, 2015

யுத்தக்குற்ற ஆவணப்படத்தை சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்வர்???

சிறிலங்காவின் தமது அடுத்த யுத்தக்குற்றங்கள் குறித்த ஆவணப்படங்களைத் தயாரித்த பிரித்தானிய ஊடகவியலாளரும், செனல் 4 தொலைகாட்சியின் பணிப்பாளருமான கெலம் மெக்ரே, அதன் தொடர்ச்சியாக மற்றுமொரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார்.
இதுவிரைவில் வெளியாகவிருப்பதாக, இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அரசாங்கம் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் குறித்த தமது ஆவணப்படங்களுக்கு சிறந்த வரவேற்பு கிடைத்திருந்தது.
ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் அவை சென்றடையவில்லை.
இந்த நிலையில் அடுத்து வெளியாகவுள்ள ஆவணப்படும்
, இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளைச் சிங்கள மக்கள் புரிந்துக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கு, சிங்கள மக்களின் ஒத்துழைப்பும், புரிதலும் முக்கியமானதாகும்.
மகிந்த அரசாங்கத்தின் ஊழல்களை அறிந்து கொண்ட சிங்கள மக்களை அவரை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தார்கள்.
அதேபோன்று இறுதி யுத்தத்தில் உண்மையில் தமிழ் மக்களுக்கு எதிராக என்னென்ன கொடுமைகள் இடம்பெற்றன? 
என்பதை சிங்கள மக்கள் அறிந்து கொண்டால், அவர்களும் தமிழர்களுக்கு ஆதரவான சக்தியாக மாறுவார்கள்.
எனவே தாம் தயாரித்துள்ள அடுத்த ஆவணப்படம் சிங்கள மொழியிலும் உருவாக்கப்படுவதாகவும், அத்துடன் சிங்களவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளும் வகையிலும் அமைக்கப்படுவதாகவும் கெலம் மெக்கரே தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>