18

siruppiddy

ஜூலை 16, 2015

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் நிகழ்வில் முதலமைச்சரின் சிறப்புரை!

சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் லண்டனில் ஆண்டுதோறும் நடத்தும் “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்ச்சியில் வடமாகாண சபை முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தாயகத்தின் இன்றைய நிலவரம் தொடர்பில் 
உரையாற்றவிருக்கிறார். இந்நிகழ்ச்சி இம்மாதம் (ஜுலை) 17ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குலண்டன் ஹரோவில் உள்ள கட்வா படிடார் நிலையத்தில் ( Kadwa Patidar Centre,Kenmore Avenue,Harrow, HA3 5BD)நடைபெறவுள்ளது.
வரையறுக்கப்பட்ட ஆசனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளதால் அனுமதிச்சீட்டுக்களை ( தனி நபர் : 10 பவுண்டுகள், சிறுவர்களுக்கு இலவசம்) முன்கூட்டியே பெற்றுக்கொண்டு ஆசனங்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புபவர்களுக்குஅறிவுறுத்தப்படுகிறது. இந்த நிகழ்வு தொடர்பில் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
ஆனந்தி சூரியப்பிரகாசம் (+44 208 543 7226),
கோபி றட்ணம் ( +44 758 597 8377),
பெய்லோன் யோகரட்ணம் (+44 795 693 9874),
விஜய் செந்தில் (+44 772 333 3205)
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூலை 12, 2015

அமைச்சருக்கும் பாதுகாப்புச் சோதனை!

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவுக்கும் உடற்பரிசோதனையை பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டனர். நேற்று கொழும்பில் நடந்த ஐதேக கூட்டத்துக்கு வந்த போதே பாதுகாப்பு இராஜாங்க 
அமைச்சரும் உடற்பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு மட்டக்களப்பில்!

காணாமல்போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட அமர்வு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. நாளை நடைபெறும் விசேட கூட்டத்திலேயே திகதி விவரம் பற்றி இறுதி 
முடிவெடுக்கப்படும் என்று ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்தார். காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது கடந்த அமர்வை திருகோணமலையில் நடத்தியது.
மட்டக்களப்பில் இதற்கு முன்னரும் பொது அமர்வு நடத்தப்பட்டிருந்தது. அதன்போது கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் புதிய முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்காகவுமே அங்கு மீளவும் அமர்வு நடைபெறுகின்றது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அமெரிக்கா அழுத்தம்!

இனப்படுகொலை விடயத்தில் மென்மைப்போக்கை கடைப்பிடித்து வடக்கு மாகாண மக்களின் நல்லிணக்கம் தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லுமாறு, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
வட மாகாண முதலமைச்சர், அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்குமான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவர் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதிசெயலாளர் நிசா பிஸ்வாலை சந்தித்துள்ளார்.இதன்போது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களுக்கு அப்பால் வடக்கின் நல்லிணக்கம், புனரமைப்பு மற்றும்
 புனர்வாழ்வு விடயத்தில் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிஸ்வால், விக்னேஸ்வரனிடம் கேட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதை வாய்ப்பாக கொள்ளுமாறு விக்னேஸ்வரன் கோரப்பட்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது முதலமைச்சர் உலக வங்கி பிரதிநிதிகளையும் சந்தித்தார். எனினும் பேசப்பட்ட விடயங்கள் வெளியாகவில்லை. அத்துடன் காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்ஸனுடன் அவர் மூடிய அறை பேச்சுவார்த்தையையும் நடத்தியுள்ளார். இதேவேளை தமது பயணம் 
தனிப்பட்டது என்ற அடிப்படையில் அவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரனை சந்திக்கவில்லை என்று ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூலை 09, 2015

கைதானவர் முன்னாள் போராளி அல்ல! - மனைவியே காட்டிக்கொடுத்தார்

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் விடுதலைப்புலி உறுப்பினர் அல்ல என தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல்.எப்.கஸ்தூரியாராச்சி தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில், தெல்லிப்பளை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டார்
கைது செய்யப்பட்டவர் யாழ்.தெல்லிப்பளையைச் சேர்ந்த, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் என தெரிவிக்கப்பட்டது. 119 எனும் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர் கடந்த திங்கட்கிழமை கைது
 செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு இடம்பெற்று வந்துள்ளது. இதனால் மனைவியே 119 எனும் அவசர பொலிஸ் பிரிவிற்கு அழைத்து இத்தவறான தகவலை வழங்கியுள்ளார். குறித்தநபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அது தொடர்பான அறிக்கை எமக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை. ஆனால், குறித்த நபர் விடுதலைப்புலி உறுப்பினர் இல்லை என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவர் யுத்த காலத்தில் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒருவார யுத்தப்பயிற்சியை நிறைவு செய்தபோதிலும், இயக்கத்தில் செயற்படவில்லை. இவரது சகோதரனும், சகோதரியுமே இயக்கத்தில் செயற்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்தநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து அவர் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூன் 25, 2015

இறுதி யுத்தம் இரவு நேரம்: வெளியானது பிரபாகரன் கடைசி சந்திப்பு..!!

விடுதலைப்புலிகளின் தலைவர் தனது முடிவில் மிக உறுதியாக இருந்தார் என்பதை ஏற்கனவே பல சம்பவங்களின் மூலம் அறிய கிடைத்துள்ளது. விடுதலைப்புலிகளிற்கும் இலங்கைக்குமிடையில் சில சர்வதேச பிரமுகர்களிற்கு ஊடாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட
 இணக்கப்பாட்டின் படி அரசியல் மற்றும் மருத்துவப்போராளிகள் சரணடைவார்கள் என்றுதான் பிரபாகரன் கூறியிருந்தார். இது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்த நிலையில் புதிய தகவலொன்றும் வெளியாகியுள்ளது. விடுதலைப்புலிகளின் நிதித்துறை பொறுப்பாளரான பாலதாசிற்கு இறுதி நேரத்தில் 
பிரபாகரன் சொன்ன அந்த அதிர்ச்சியான தகவல் என்ன என்பதே இப்பொழுது எழுந்துள்ள பரபரப்பான கேள்வியாகும். 2009 மே மாதம் 16ம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது உண்மையான
 அர்த்தத்தில் யுத்தம் முடிவதற்கு முதல்நாள். அதுவரை வெள்ளமுள்ளிவாய்க்காலின் கிழக்கு புறமாக பொக்கணை யிலிருந்து முல்லைத்தீவு செய்லும் வீதியின் இடதுபுறமாக உள்ள வீடொன்றிலேயே பிரபாகரன் தங்கியிருந்திருக்கிறார். அந்த சமயத்தில் வலைஞர்மடக்கடற்கரை பகுதியினூடாக முன்னேறி வந்த இராணுவம் வெள்ளமுள்ளிவாய்க்கால் கடற்கரையையும் நெருக்கியிருந்தது. இதனால் கடற்கரையை அண்டிய அந்த பகுதியிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம்
 பிரபாகரனிற்கு ஏற்பட்டிருந்தது. இதுதவிர, மறுநாள் 17ம் திகதி விடுதலைப்புலிகள் பெருமெடுப்பிலான ஊடறுப்புசமர் ஒன்றை நந்திக்கடல் அரண்களின் மேல் நடத்தி வற்றாப்பளை பகுதிக்கு நகரும் திட்டமிட்டிருந்தனர். இதற்காகவும் வெள்ளாமுள்ளிவாய்க்காலின் மேற்குப்பக்கமாக பிரபாகரன் நகர வேண்டியிருந்தது. மிகஇறுக்கமாக அந்த களத்தில் மனிதர்கள் நிமிர்ந்து நடக்கவே முடியாத நேரம். அவ்வளவு அகோர செல் மற்றும் துப்பாக்கிச்சூடு. இவை சற்று தணிந்த சமயத்தில் மாலை மங்கும்
 சமயத்தில் பிரபாகரன் பிரதான வீதியை கடந்து மேற்குப்பக்கமாக நகர்ந்துள்ளார். வெள்ளமுள்ளிவாய்க்காலின் உண்டியல்பிள்ளையார் ஆலயம் உள்ள பகுதியால் பிரபாகரன் வீதியை குறுக்கறுக்க 
திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு அருகில் உள்ள பதுங்குகுழி ஒன்றில்த்தான் நிதித்துறை பொறுப்பாளர் பாலதாஸ் இருந்தார். அவர் காலில் காயமடைந்திருந்தார். நடமாட முடியத நிலை. அந்த பகுதியை குறுக்கறுக்கும் போது காயமடைந்திருந்த பாலதாசை ஒருமறை சந்திக்க விரும்பிய பிரபாகரன், அந்த பகுதிக்கு வந்து, பதுங்குகுழிக்குள் இறங்கியுள்ளார். தனது மெய்ப்பாதுகாவலர்களையும் உள்ளே அவர் 
வரவிடவில்லை. மிக இறுக்கமான அந்த சமயத்தில் சில நிமிடங்கள் மட்டுமே அந்த சந்திப்பு நடந்தது. சில நிமிடங்களின் பின்னர் முகத்தில் எந்த மாற்றம் இல்லாமல் பிரபாகரன் 
பதுங்குகுழியை விட்டு வெளியில் வந்துள்ளார். அவர் சிறிதுதூரம் நடப்பதற்குள், பாலதாஸ் பெருங்குரலில் சத்தமிட்டு அழ ஆரம்பித்துள்ளார். பிரபாகரன் சொல்லிவிட்டு சென்ற தகவல் ஒன்றே அவரை நிலைகுலைய வைத்திருக்கும் என நம்பப்படுகிறது. விடுதலைப்புலி 
போராளிகள் தமது மரணத்திற்காக அழுபவர்கள் இல்லையென்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதனால் தனது முடிவு நினைத்து பாலதாஸ் அழுதிருப்பார் என நம்ப இடமில்லை. அனேகமாக தனது உறுதியான நிலைப்பாட்டையே பிரபாகரன் கூறியிருக்கலாமென்றே ஊகிக்க முடிகிறது. -

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஜூன் 20, 2015

புதிய பிரதமராக சமல் ராஜபக்சவா???

சபாநாயகர் சமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்கவேண்டுமென இடதுசாரி கட்சிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார்
 தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க
 மீதான குற்றங்கள் அதிகரிப்பதால் அவரை பதவிவிலக்கி சபாநாயகர் சமல் ராஜபக்சவை நியமிக்கவேண்டும். பதில் சபாநாயகார் சந்திம வீராகொடியை சபாநாயகராக அடுத்த தேர்தல் 
நடக்கும்வரை பதவியில் இருத்தலாம் என மைத்திபால சிறிசேனவிடம் இடதுசாரிகள் சில ஒன்றிணைந்து கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>