: உறுதியான நிலைப்பாடு உற்சாகத்தினை தருகின்றது : நா.தமிழீழ அரசாங்க அமைச்சர் சுதன்ராஜ்
ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் தமிழக முதலமைச்சரின் உறுதியான நிலைப்பாடு , மகிழ்ச்சியினையும் உற்சாகத்தினையும் தருகின்றதாக நா.தமிழீழ அரசாங்க அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடி அவர்களுடனான சந்திப்பின் பொழுது, ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் முன்வைத்திருந்த கோரிக்கை தொடர்பில், தமிழக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த கருத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :
மதிப்புக்குரிய தமிழக முதல்வர் செவ்வி ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் அவர் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாடு மகிழ்ச்சியினையும், உற்சாகத்தினையும் தருகின்றது.
ஈழத்தமிழினத்துக்கு நடந்தது ஒர் இனப்படுகொலையே என்பதனை, மதிப்புக்குரிய தமிழக முதல்வர் செவ்வி ஜெயலலிதா அவர்கள் உறுதிபட தெரிவித்திருப்பது எம்மை எல்லாம் ஆறுதலில் ஆழ்த்தியுள்ளது.
சிறிலங்கா தொடர்பில் அனைத்துல விசாரணையொன்றினை ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையம் விரைவில் தொடங்கவிருக்கின்ற நிலையில், அனைத்துலக நீதிமன்றத்துக்கு சிறிலங்காவினை இந்தியா கொண்டு செல்லவேண்டும் என்ற நிலைப்பாட்டினை, மதிப்புக்குரிய தமிழக முதல்வர் செவ்வி ஜெயலலிதா அவர்கள் உரிய நேரத்தில் முன்னெடுப்பார் என நாங்கள் திடமாக நம்புகின்றோம்.
தமிழீழத்துக்கான பொதுசன வாக்கெடுப்பொன்றினையும் நடத்த வேண்டும் என்ற மதிப்புக்குரிய தமிழக முதல்வர் செவ்வி ஜெயலலிதா அவர்களது நிலைப்பாடும், எமக்கு உற்சாகத்தினையும் நம்பிக்கையினையும் தருகின்றது.
சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசே ஈழதமிழர் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வாக அமைவதோடு, இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களுக்கும் ஏற்றதாக அமையும்.
இவ்வாறு அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக