வடக்கு பகுதிகளில் உள்ள பெண்களை இலக்கு வைத்து படையினரால் பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக கனடா தெரிவித்த குற்றச்சாட்டை இலங்கை நிராகரித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் வசித்து வரும் தமிழ் பெண்களை இலக்கு வைத்து பாலியல் துன்புறுத்தல்களை இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் வைத்து கனடா குற்றச்சாட்டை முன்வைத்தது. பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு எதிராக இலங்கை படையினர் பாலியல் துன்புறுத்தல்களை ஆயுதங்களாக பயன்படுத்துவதாக கனடாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான பிரதிநிதி இதன்போது குறிப்பிட்டார்.
எனினும் இந்த குற்றச்சாட்டை இலங்கை முற்றாக மறுத்துள்ளது. சாட்சியங்கள் எதுவும் இன்றி இவ்வாறு எதேச்சையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தொடர்பில் கனடா சிந்திக்க வேண்டும் எனவும் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் கனேடிய அரசாங்கத்தை தவறாக வழிநடத்துவதாகவும் இலங்கை அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. மற்றைய செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக