புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 5,754 பேருக்கு சுயதொழில் நிவாரணக் கடன் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த மற்றும் கைதான முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட பின்னர் சுயதொழில் புரிவதற்காக நிவாரணக் கடன் வழங்கும் திட்டம் 2012 முதல் மேற்கொள்ளப்பட்டது. இதன் கீழ் 2014 டிசம்பர் வரை 302 மில்லியன் ரூபா கடனுதவி வழங்கப்பட்டது.
இந்த கடனை பெற மேலும் 5,754 பேர் விண்ணப்பித்துள்ளதால் அவர்களுக்கும் அரச வங்கிகளினூடாக நிவாரண கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். இந்தநிலையிலேயே புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சுயதொழில் நிவாரணக் கடன் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக