இலங்கை விடயத்தில் நோர்வேயின், முன்னாள் சமாதான ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்முக்கு எவ்வித பங்கும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் அண்மையில் லண்டனில் இடம்பெற்ற புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்பின் போது அவர் தமது கருத்துக்களை மாத்திரே பகிர்ந்து கொண்டதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அவை பயனுள்ளவையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விடயத்தில் எரிக் சொல்ஹெய்மின் பின்புலம் என்ற தலைப்பில் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டமை தொடர்பிலேயே
அமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது.லண்டன் நிகழ்வின்போது எரிக் சொல்ஹெய்ம் மிகக்குறுகிய நேரமே கலந்துரையாடலில் பங்கேற்றார். இதன்போது அவர் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக