18

siruppiddy

ஜூன் 04, 2015

நாடாளுமன்றின் கட்சிகள்சம்பந்தனை நியமிப்பதற்கு இணக்கம்

அரசியல் அமைப்பு பேரவைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன.
அரசியல் அமைப்பு பேரவையின் சிறுபான்மை கட்சிப் பிரதிநிதியாக சம்பந்தன் பெயரிடப்பட்டுள்ளார்.
இதற்கு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நான்கு கட்சிகளும் சம்பந்தனை நியமிப்பதற்கு இணங்கியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சிää ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஜனநாயக தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளே இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளன.
சம்பந்தனை நியமிப்பது குறித்து இந்த கட்சிகளின் கருத்து கேட்டறியப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளிடமமோ அல்லது நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் ஏனைய கட்சிகளிடமோ அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
கட்சிகளின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவின் கருத்தை நிராகரிக்கின்றோம் என லக்ஸ்மன் கிரியல்ல சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் அரசியல் அமைப்பு பேரவை தற்போதைக்கு நிறுவப்படக் கூடிய சாத்தியங்கள் குறைவாகக் காணப்படுகின்றது என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக