18

siruppiddy

ஜூன் 01, 2015

தலைவர் கருணாநிதி அவரகளின் 92வது பிறந்த நாள்:

 திமுக தலைவர் கருணாநிதி வருகிற 3ம் தேதி தனது 92வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அன்றைய தினம் தொண்டர்களிடம் அவர்  வாழ்த்துக்களையும்  பெறுகிறார். சென்னை மேற்கு மாவட்ட திமுக தலைவர் ஜெ.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர்  கருணாநிதியின் 92வது பிறந்த

 நாள் விழா வருகிற 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி  பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி ெசலுத்துகிறார். அதைத் தொடர்ந்து காலை 7.15 மணிக்கு தந்தைபெரியார்  நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் தொண்டர்களிடம் அவர் வாழ்த்துக்களை பெறுகிறார். அதன் பின்னர் சென்னை  ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஓ. மைதானத்தில் நடைபெறும் பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை ஒரு மாதம் கொண்டாட திமுகவினர் முடிவு செய்துள்ளனர்.

பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு ெபாதுக்கூட்டங்கள் மற்றும் ஏழை, எளிய  மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம்,  ஆதரவற்றோர் பள்ளிகளுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்ேவறு நல உதவிகளை வழங்க உள்ளனர். மேலும், ரத்ததானம் முகாம் நடத்தி அரசு  ஆஸ்பத்திரிகளுக்கு ரத்த தானம் வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.

       

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக