அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை குறித்த ஊடகவியலாளர் நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்ததாகவும் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறியமை தொடர்பிலேயே
அவரைக் கைது செய்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஹிக்கடுவை பகுதியிலிருந்து சட்ட விரோதமாக படகு மூலம் இவர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். இந் நிலையிலேயே அவர் நேற்று முன் தினம் இலங்கைக்கு திரும்பியுள்ளார்.
இதன் போது விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் புண்ணியமூர்த்தி சசிகரனை கைது செய்த நிலையில் அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சட்ட விரோதமாக சட்ட ரீதியிலான துறை முகம் அல்லாத ஒரு இடத்திலிருந்து வெளி நாடொன்றுக்கு பயணித்தமை தொடர்பில்
குடிவரவு – குடியகல்வு சட்டங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சசிகரன், நேற்று மாலை நீர்கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக