இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40 ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததாக கூறப்படும் விடயம் கட்டுக்கதையென காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களி்ன் எண்ணிக்கை தொடர்பிலான சர்ச்சையை அண்மையில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்ட சனல் 4 ஊடகத்தின் ஊடகவியலாளர் மீண்டும் தோற்றுவித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு, அததுவொரு கட்டுக்கதை எனவும் கூறியுள்ளார்.
யுத்த சூனிய வலயமொன்று காணப்படவில்லை எனவும், அவ்வாறான வலயமொன்றை உருவாக்க தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதும் இணங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், யுத்த சூனிய வலயத்தில் படையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.
விசேட விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் அடிப்படையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான தகவல்கள் அவர்களது உறவினர்களுக்கு வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்
படையினரிடம் சரணடைந்ததாகக் கூறப்படும் சில தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தற்போது வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகவும் மெக்ஸ்வெல் பரணகம மேலும்
சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக