18

siruppiddy

ஜூன் 28, 2016

முதல்வர் சீ.வியின் அதிரடி உத்தரவு வடக்கு ஆசிரியர்களுக்கு?

ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர வகுப்புக்கள், விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் ஆகியன பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடாத்தப்படக்கூடாது. அவ்வாறு நடாத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  தெரிவித்துள்ளார். வடமராட்சி புலோலி புற்றளை மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு...

ஜூன் 19, 2016

ராணுவம் வடக்கிலிருந்து படிப்படியாக நீக்கப்படுமாம்!

இலங்கை அரசாங்கத்தினது உயர்மட்ட அரசியல்வாதிகளால் அடிக்கடி திருவாய் மலர்ந்த அறிக்கைகளுக்கு நேர்விரோதமாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவாசம் திருவாய் மலர்ந்திருப்பது அரசினது வார்த்தை ஜாலங்களில் ஒன்று என அமெரிக்க அதிகாரிகளுக்கு எங்கே விளங்கப்போகிறது. அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மேலும் கூறுகையில் வடக்கு கிழக்கிலிருக்கும் ராணுவத்தை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அப்பட்டமான பொய்யை அமெரிக்காவுக்கு கூறியிருக்கிறார்.அமெரிக்க...

ஜூன் 15, 2016

தலைவர் பிரபாகரன் மரணிக்கவில்லை: பொன்சேகாதெரிவிப்பு !!!

தலைவர் பிரபாகரன் மரணிக்கவில்லை: பொன்சேகா கரும்புலிகளுக்கு படகுவாங்க காசு கொடுத்தார் பசில் மலையகத் தலைவர்களிடம் ஒப்படைத்தார் பிரபாகரன் பாகிஸ்தானிடம் இருந்தே ரவைகள் பெற்றோம் நானிருக்கும் போதே 200 கிலோகிராம் தங்கம் மீட்டோம் என் ஜாதகத்தை திருடிப் பார்த்தனர் படைவிட்டோடி இன்று புத்தகம் எழுதுகிறார் வெள்ளைக் கொடியைக் கிளறுங்கள்  பதவி கிடைத்தால்,  பீல்ட் மார்ஷலைப் பறிப்பர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், 2009ஆம் ஆண்டு...

ஜூன் 09, 2016

இன்று இடம்பெற்ற கைக்குண்டு வீச்சில் இரு பெண்கள் உட்பட மூவர் சாவு!

கொஸ்வத்தை – தலங்கம பகுதியில் இன்று இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரும் பலியாகினர். 9 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் பலியான ஆண் புனிதத் தளம் ஒன்றில்  பணிபுரிபவராவார். அவரிடம் பெண் ஒருவர் தனது தாய் மற்றும் மகளுடன் வழிபாடு நிமித்தம் சென்ற வேளை,  முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பின்னர், இது தொடர்பில் முறையிட குறித்த பெண் பொலிஸ்...

ஜூன் 01, 2016

மட்டக்களப்பில் கிராமசேவகரை தாக்கியமைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து கிராம சேவகரை இராணுவம் தாக்கியதை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது . காட்டு பிரதேசங்களில் இருந்து மரங்களை வெட்டிக்கொண்டு வந்த இராணுவத்தினருக்கும் கிராம சேவகருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இராணுவத்தினர் கிராமசேவகரை  தாக்கியுள்ளனர். இவ்வாறு கிராமசேவகர் தாக்கப்பட்டமையை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...