18

siruppiddy

டிசம்பர் 12, 2015

மைத்திரிக்குப் பின்னும் வெள்ளை வான்தொடர்கிறது???

இலங்கை அரசாங்கங்கள், மனித உரிமைகளைப் பேணாது தொடர்கதையாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளன. இவ்வருடம் ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் கூட, வெள்ளை வான் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் 
தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை (10) நடைபெற்ற போது, அதில் மனித உரிமைகள் தினத்தையொட்டி ஆற்றிய சிறப்புரையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், ‘ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான ஆவணங்களில் அறிவிக்கப்பட்டிருக்கும் கோட்பாடுகள், இலங்கையைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானவை. அதுவும், தமிழ் மக்கள் இன்றுவரை அனுபவித்து வரும் அல்லல், அவலங்களுடன் மிக நெருங்கிய தொடர்புகள் கொண்டவை. 
தொடர்ந்துவந்த
 இலங்கை அரசாங்கங்களினால் தமிழ் மக்களின் உரித்துக்கள், தனிமனித ரீதியிலும் நிர்ணயிக்கப்பட்ட மக்கட் கூட்டம் என்ற ரீதியிலும், காலாதிகாலமாக மீறப்பட்டு வந்துள்ளன. ‘சகல மக்கட் கூட்டங்களும் சுய நிர்ணய உரித்தையுடையவர்கள். அவ்வுரித்தின் அடிப்படையில் 
அவர்கள், தமது 
அரசியல் நிலையை வகுக்க முடியும். அத்துடன், சுதந்திரமாகத் தமது பொருளாதார, சமூக, கலாசார அபிவிருத்தியை வழிநடத்திச் செல்லமுடியும்’ என ஐ.நா சுயநிர்ணய உரிமையில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சுயநிர்ணய உரிமைதான், தமிழ்பேசும் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மிக முக்கிய மனித உரிமையான சமத்துவத்துக்குமான உரித்து, இலங்கை இயங்கத் தொடங்கிய காலம் முதல், தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றது.
தனிப்பட்ட தமிழ் மக்களுக்கான உயிருக்கான உரித்துக் கூட, அரசாலும் அதன் முகாமைகளாலும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளால் வழிநடத்தப்பட்டுள்ளன. நடந்த மனிதப் படுகொலைகளுக்கு, இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை. குடியியல், அரசியல் உரிமைகளுக்கான சமவாயத்தில் கூறப்பட்டிருக்கும் மாற்றமுடியாத உரித்துக்களாகிய சுதந்திரத்துக்கான உரித்து, நூற்றுக்கணக்கிலான 
தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு
 இன்றும் மறுக்கப்பட்டு அவர்கள், விளக்கமற்ற விளக்கமறியல்களிலும், விளப்பமற்ற விளக்கங்களிலும் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து அவர்களைச் சிறைப்படுத்தி வைத்தல், 
இலங்கை அரசாங்கம்,
 சுதந்திரத்துக்கான மனித உரிமையை மீறும் செயலாகும். ஆகவே, தமிழ் அரசியல் கைதிகளைத் தாமதமின்றி உடனே விடுவிப்பது, அரசாங்கத்தின் தலையாய கடனாகும். அவ்வாறு விடுவித்தால்தான், எமது நாட்டில், எமது ஆட்சியாளர்களிடையே மனித உரிமையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கம் உண்டென்று, உணரக் கூடியதாக 
இருக்கும் என்றார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக