18

siruppiddy

நவம்பர் 06, 2016

அம்பாந்தோட்டை ஒரு குட்டி சீனாவாக மாற்றப்படப்போகிறதாம! .

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கைக்குச் செல்லப் போகிறது. இந்த மாத நடுப்பகுதியில் சீனா நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம் செய்துகொள்ளவுள்ள உடன்பாட்டுக்கமைய அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்கு சீன நிறுவனத்திற்கு
 விற்கப்படவுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகம் மாத்திரமின்றி மத்தள விமான நிலையமும் கூட அவ்வாறுதான் சீன நிறுவனத்திற்கு கைமாற்றப்படவுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் உரிமையை சீன நிறுவனத்திற்கு கைமாற்றுவதன்மூலம் கிடைக்கும் 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை கொண்டு ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பெறப்பட்ட கடனை அடைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சீனாவிடம் பெறப்பட்டுள்ள இத்தகைய கடன்களை அடைப்பதற்கு அம்பாந்தோட்டை துறைமுகம் போன்று எட்டு பாரிய திட்டங்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் சீனாவிடம் பெற்றுள்ள மொத்தக் கடன் தொலை 8 பில்லியன் டொலராகும்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் மத்தள விமான நிலையத்தையும் கையில் வைத்திருப்பதால் எந்த இலாபமும் கிடைக்காது. கடனையும் செலுத்த முடியாது என்பதை உணர்ந்தே அரசாங்கம் சீனாவுடன் இத்தகைய இணக்கப்பாடு ஒன்றுக்குச் சென்றுள்ளது.
இந்த இரண்டு திட்டங்களையும் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியில் இருந்தபோது வெள்ளை யானைத்திட்டங்கள் என்றே 
கூறி வந்தார்.
பொருளாதார ரீதியாக பயனற்ற திட்டங்களாகவே இவை இரண்டும் இருக்கும் என்ற கடந்த கால கணிப்பீடுகள் சரியானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் தான், எப்படியாவது இதனைச் சீனாவின் தலையில் கட்டிவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, அதற்கான காய்நகர்த்தல்களில் இறங்கியிருக்கிறார் ரணில் 
விக்ரமசிங்க.
கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சினாவிற்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணத்தின் அடிப்படை நோக்கமே இந்த திட்டங்களை வைத்து சீனாவின் கடன்களில் ஒருபகுதியை அடைப்பது குறித்து பேச்சு நடத்துவதுதான்.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தவுடனேயே சீனாவின் கடனை அடைப்பதே பிரதான பிரச்சினையாக இருந்தது.அதனால் அம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட நிதிக்காக அறவிடும் வட்டியை குறைக்குமாறு சீனாவிடம் கேட்டிருந்தார் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமல் ரணில் விக்ரமசிங்கவும் இது தொடர்பாக சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை.
இரண்டு நாடுகளுக்கும்ட நன்மையளிக்கக் கூடியவகையில், நியாயமான வட்டியுடன் தான் கடன் வழங்கப்பட்டிருப்பதாக கூறி சீனா அந்த கோரிக்கையை தட்டிக்கழித்து விட்டது.
அதற்குப் பின்னர் தான் கடந்த ஏப்ரல் மாதம் கடன்களை அடைப்பதற்குப் பதிலாக சீனாவின் திட்டங்களை அதனிடமே ஒப்படைத்துவிடும் திட்டத்துடன் பீஜிங் சென்றிருந்தார் ரணில்.
உடனடியாக சீனா அந்தத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆராய்ந்து பார்க்கிறோம் என்று கூறி அனுப்பி விட்டது. அது பற்றி ஆராய குழுக்களை அனுப்பியது. பேச்சுவார்த்தை நடாத்தியது.
இந்தப் பேச்சுக்களின் தொடர்ச்சியாகவே இரண்டு பிரதான திட்டங்களின் உரிமையின் 80 வீதத்தினை சீனாவுக்கு வழங்கும் உடன்பாடு செய்து கொள்ளப்படும்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இந்த மாத நடுப்பகுதியில் இது பற்றிய உடன்பாடு கையெடுத்திடப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், இந்த இரண்டு திட்டங்களின் உரிமையையும் பெற்றுக் கொள்ளப்போகும் நிறுவனத்தின் பெயரை 
வெளியிடவில்லை.
ஆனாலும் சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனமே இதனை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் எதற்காக அரசாங்கம் இதனை மறைக்கிறது- மறைக்கப்படுகின்றது என தெரியவில்லை.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்த இரண்டு திட்டங்களையும் சீனாவின் உதவியுடள் முன்னெடுத்தபோது அம்பாந்தோட்டையில் சீனா காலூன்றப்போவதாக துள்ளிக் குதித்த எவருமே இப்போது மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்ரமசிங்க கூட்டு அரசாங்கம் இந்த திட்டங்களை சீனாவுக்கு விற்கும் நடவடிக்கையை பகிரங்கமாகச் செய்யும்போது வாய் திறக்காமல் இருப்பதுதான் ஆச்சரியம்.
முன்னர் அம்பாந்தோட்டையில் சீனத்திட்டங்களை எதிர்ந்த இந்தியாவும் அமெரிக்காவும் இப்போது எவுதுமே பேசாமல் 
இருக்கின்றன.
இந்தியாவின் எதிர்ப்பைப்பொருட்படுத்தாமல், மகிந்த ராஜபக்ச அம்பாந்தோட்டையில் சீனாவின் உதவியுடள் திட்டங்களை முன்னெடுத்தபோது அங்கு ஒரு துணைத்தூதரகத்தை நிறுவி கண்காணிப்பதில் திருப்திப்பட்டுக் கொண்டது
 இந்தியா.
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்ல் வரப்போகும் விடயத்தை இந்தியா அவ்வளவு இலகுவான விடயமாக எடுத்துக் கொள்ளாது.
ஏனெ்னறால் இந்தத்திட்டம் சீனா பற்றிய சந்தேகங்களையும் அச்சங்களையும் அதிகரிக்கச் செய்யும்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் வணிக ரீதியாக வெற்றிபெறமுயாது என்பதை இந்தியா ஏற்கனவே அறியும்.
ஏனென்றால் இந்தத்திட்டத்தை மகிந்த ராஜபக்ச இந்தியாவிடம் தான் முதலில் முன் வைத்திருந்தார்.
இதுபற்றிய இரகசியமான சாத்திய ஆய்வை மேற்கொண்ட இந்திய வர்த்தக ரீதியான அனுகூலங்களைப் பெறமுயாது என்பதால் அதில் முதலீடு செய்வதற்கு முன்வரவில்லை. அதற்குப்பின்னர் தான் சீனாவின் கைக்கு இந்தத்திட்டம் சென்றது.
இந்தத்திட்டத்தில் மில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்யும்போதே இதனால் பயன்கிடைக்காது என்று சீனாவுக்குத் தெரியும்.
சீனாவைப் பொறுத்தவரையில் அப்போதே ஒரே கல்லில் பல காய்களை விழுத்த திட்டம் போட்டுவிட்டது.
அதனால்தான் மில்லியன் கணக்கான டொலர்களை கொடுத்து அம்பாந்தோட்டையில் துறைமுகத்தையும் விமான நிலையத்தையும் அமைப்பதற்கு கஊக்குவித்தது.
எந்தக் கேள்வியும் கேட்காமல் கடன்கொடுக்கிறது சீனா என்று மகிந்த ராஜபக்ச பல சமயங்களில் குறிப்பிட்ருந்தார்.
எதற்காக சீனா அவ்வாறு கொடுத்தது என்றால், அற்தக் கடன் எப்பிடியாவது திரும்பி தனது கைக்கு வரும் என்ற நம்பிக்கை அதற்கு இருந்தது.
நிதியை முதலீடு செய்த சீனா தனது நிறுவனங்களுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
இதன்மூல் சீனாவுக்கு இரண்டு வாய்ப்புக்கள் கிடத்தது. ஒன்று வழங்கப்பட்ட கடன் வட்டியுடன் சேர்த்து வரும். அதேவேளை சின நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தொழில் வாய்ப்புக் கிடைத்தது.

அம்பாந்தோட்டை துறைமுகம் விமான நிலையம் போன்ற திட்டங்களினால் இலங்கைக்க ஆதாயம் கிடைக்காது என்று தெரிந்துகொண்டே அதில் முதலீடு செய்வதற்கு நீனா முன்வந்தது.
அப்போது மகிந்த ராஜபக்ச அரசாங்கம் விழுந்த பொறியில் இருந்து தப்பிக் கொள்ள முடியாமல் தற்போதைய அரசாங்கம் தவிக்கிறது.
இந்த நிலைமை இலங்கைக்கு வரும் என்பது சீனாவுக்கு முன்னரே தெரியும். இந்த இரண்டு திட்டங்களையும் செயற்படுத்த முடியாத நிலை இலங்கைக்கு ஏற்படும்போது தன்னைத் தேடிவருவதைத் தவிர வேறு வழி கிடையாது என்பதை சீனா அறிந்தேயிருந்தது.
ஏனெ்னறால் இந்தத்திட்டங்களில் வேறு நாடுகள் ஒருபோதும் முதலீடு செய்ய முன்வரப்போவதில்லை. சீனா எதிர்பார்த்த மாதிரியே இலங்கை அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலயங்களை வைத்துக்கொண்டு கடனை அடைக்குமாறு ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார்.இப்போது அதற்கான உடன்பாடுதான் கையெழுத்திடப்படவுள்ளது.
இப்போது பயனளிக்காத அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் விமான நிலையத்தையும் வைத்து சீனா என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுகிறது.
நிச்சயமாக சீனா இவற்றை இராணுவத்தேவைகளுக்காகப் பயன்படுத்த முடியாது. அத்தகைய நோக்கில் பயன்படுத்துவதைத்தடுக்கும் வகையில் தான் சீனாவுடனான உடன்பாடு அமையும் என்பதில் 
சந்தேகமில்லை.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை இராணுவப் பயன்பாட்டிற்கு அனுமதிக்கும் உடன்பாட்டில் கையெழுத்திடப்பட்டால், அல்லது இராணுவத்தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடாது என்ற விடயம் உடன்பாட்டில் சேர்க்கப்படாது போனால் இந்தியாவும் அமெரிக்காவும் எதிர்ப்பைத் தெரிவிக்கும்.
சீனாவுக்கு இப்போது அம்பாந்தோட்டையில் தேவைப்படுவது இராணுவத் தளம் இல்லை. அத்தகைய தளத்தை அமைப்பதற்காக அது இன்னும் பல ஆண்டுக்ள காத்திருக்கவும் தயார்.
அதற்கு முன்னதாக அம்பாந்தோட்டையில் ஏதோ ஒரு வழியில் கால் வைக்க வேண்டும். அதுான் சீனாவின் தேவை.
இலங்கையில் பொருளாதார நிலை காரணமாக வேறு வழியன்றி சீனாவிடம் சரணடைந்திருக்கின்ற அரசாங்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, எப்படியாவது அம்பாந்தோட்டை ஒரு குட்டி சீனாவாக மாற்றப்படப்போகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையம் என்பன மாத்திரமின்றி இதனைச் சுற்றியுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலமும் சீனாவுக்கு வழங்கப்படவுள்ளது.
இங்கு பாரிய கைத்தொழில் முதலீட்டு வலயம் அமையவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் அடுத்த ஆண்டு ஜனவரி 8ம்திகதி இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தில் சீனா பெரியளவில் முதலீடுகளை மேற்கொண்டு உற்பத்திகளைத் தொடங்கினால், துறைமுகமும், விமான நிலையமும் சுறுசுறுப்பான இயங்கத்தொடங்கும். இல்லாவிட்டால் சீன நிறுவனமும் இதேபோன்றுான் காகம் கலைக்க வேண்டி இருக்கும்.
ஆனாலும் சீனா அதையிட்டு கவலைப்படப்போவதில்லை. ஏனென்றால் இலங்கையில் தளம்ட அமைக்கவே சீனா ஆசைப்பட்டது.
அதற்காக ஒரு வாய்ப்பை இதன்மூலம் சீனா பெற்றுவிடும். இராணுவத்தளமாக இல்லாவிட்டாலும், இந்தியப் பெருங்கடலில் ஒரு துறைமுகம் தனது கட்டுப்பாட்டில் இருப்பது சீனாவுக்கும் பெரிய பலத்தைக் கொடுக்கும்.
இன்னொரு பக்கத்தில் சீனாவின் பட்டுப் பாதைத்திட்டத்தை தொடர்வதற்கு இது உதவும்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் பட்டுப்பாதைத்திட்டத்தைத் தொடர்வதில் சிக்கல்களை எதிர்கொண்ட சீனாவுக்கு இது புதிய நம்பிக்கையைக் கொடுக்கும்.
ஆக மகிந்தவின் காலத்தில் வீசிய கல்லுக்கு இப்போது காய்கள் விழுந்து கொண்டிருக்கின்றன.
சரியான இலக்கை நோக்கித்தான் சீனா கல்லை வீசியிருக்கிறது என்பது இப்போது தெரிகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக