யாழ்.பண்டத்தரிப்புப் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் நிரூசன் என்ற இளைஞர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நேற்று புதன்கிழமை(10) கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து யாழ். மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களில் மாத்திரம் யாழ்.குடாநாட்டில் மாத்திரம் பத்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர் ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக கைதானவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ். குடாநாட்டில் இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பவங்கள், பொலிஸாருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் யாழ்.குடாநாட்டில் அடுத்தடுத்து தொடர்ச்சியான கைதுகள் இடம்பெற்று வருகின்றன.
கொழும்பிலிருந்து வருகை தந்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் என அடையாளப்படுத்துவோரால் கடந்த 05ஆம் திகதி மூன்று இளைஞர்களும், 06ஆம் திகதி மூன்று இளைஞர்களும், 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த கைதுகளுக்கான சரியான காரணங்கள் இதுவரை தெரியப்படுத்தப்படாமையால் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் உறவுகள் செய்வதறியாது திண்டாடி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக