18

siruppiddy

செப்டம்பர் 11, 2017

நாளைய ஜெனிவா கூட்டத்தொடரில் பொன்சேகாவின் போர்க்குற்ற ஆதாரம்!

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் போர்க்குற்ற ஆதார விவகாரத்தை நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புகள் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன. எனவே நாளை ஆரம்பிக்கப்படவுள்ள மனித உரிமைப் பேரவையின் 36வது கூட்டத்தொடரில் இலங்கை பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அனைத்துலக குற்றவியல் விசாரணைப் பொறிமுறைக்குள் இலங்கையை உள்வாங்குவதற்கான அழுத்தங்களும் வலியுறுத்தல்களும் ஏற்படலாம்...

செப்டம்பர் 10, 2017

இருவர் பொலனறுவையில் உயிரிழப்பு: ஜனாதிபதியின் சகோதரர் கைது!

பொலனறுவையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலனறுவையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர். சகோதரர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதி சொகுசு வாகனம் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றது. குறித்த வாகன விபத்தில் பொலனறுவை எதுமல்பிட்டி பகுதியில், வசிக்கும் 48 வயதுடைய ஹேரத், மற்றும்...

செப்டம்பர் 09, 2017

பொலிஸ் அதிகாரி ஒருவர் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு; ?

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தின் உப பரிசோதகர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். குறித்த உப பரிசோதகரது சடலம், பொலிஸ் நிலைய விடுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சக பொலிஸ் உத்தியோகஸ்தரொருவர் குறித்த பொலிஸ் உப பரிசோதகருக்கு காலை உணவு வழங்குவதற்காக அவரது விடுதிக்குச் சென்றிருந்தபோது குறித்த உப பரிசோதகர் நிலத்தில் விழுந்து கிடப்பதைக்  கண்டுள்ளார். இதையடுத்து உடனடியாக ஏனைய பொலிஸாருக்கும்...

செப்டம்பர் 05, 2017

யுத்தகளத்தில் நிர்க்கதியான நிலையில் தமிழ்மக்களின் புகைப்படம்!!

இறுதி யுத்தத்தின் போது 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற  பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் தொடர்பிலான புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களானது இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன், ஆயிரக்கணக்கான பொது மக்கள் நிர்கதியான...