18

siruppiddy

செப்டம்பர் 10, 2017

இருவர் பொலனறுவையில் உயிரிழப்பு: ஜனாதிபதியின் சகோதரர் கைது!


பொலனறுவையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலனறுவையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
சகோதரர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதி சொகுசு வாகனம் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றது.
குறித்த வாகன விபத்தில் பொலனறுவை எதுமல்பிட்டி பகுதியில், வசிக்கும் 48 வயதுடைய ஹேரத், மற்றும் 58 வயதுடைய புத்ததாச எனும் இருவரே உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.20 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் லால் சிறிசேன பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குறித்த வாகனத்தை தானே செலுத்தியதாக ஒப்புக்கொண்ட அவர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து 
வைக்கப்பட்டுள்ளார்.
அவரை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வரும், பொலனறுவைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக