முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தின் உப பரிசோதகர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். குறித்த உப பரிசோதகரது சடலம், பொலிஸ் நிலைய விடுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
சக பொலிஸ் உத்தியோகஸ்தரொருவர் குறித்த பொலிஸ் உப பரிசோதகருக்கு காலை உணவு வழங்குவதற்காக அவரது விடுதிக்குச் சென்றிருந்தபோது குறித்த உப பரிசோதகர் நிலத்தில் விழுந்து கிடப்பதைக்
கண்டுள்ளார்.
இதையடுத்து உடனடியாக ஏனைய பொலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவரை மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்
எனினும் அவர் ஏற்கனவே அவர் உயிரிழந்திருந்தமை இதன்போது கண்டறியப்பட்டது. உயிரிழந்த நபர் முள்ளியவளை பிரதேசத்தில் உப பரிசோதகராக கடமையாற்றிய டி.எம்.ஜ.பண்டார நாயக்க என கூறப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பொலிஸ் உப பரிசோதகர் சுகயீனம் காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு இன்று காலை சென்று வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக