வடக்கு மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி இந்தமாநாடு நடத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம்
தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் சிங்கள மொழியில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவிலுள்ள சிறி போதிதக்ஷணாராமய விகாரையில் இந்த மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன
வடக்கு கிழக்கு பிரதான பௌத்த பிக்குவும், விகாராதிபதியுமான சியம்பலாகஸ்வௌ விமலசார தேரரின் முழுமையான அனுசரணையின் கீழும், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் கருப் பொருளின் கீழும் பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளது.
புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, இதற்கான முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் அலுவகம் குறிப்பிட்டுள்ளது.
வட மாகாணத்தில் வாழ்கின்ற பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்களை அடையாளம் கண்டு கொள்வதே இந்த மாநாடு நடத்தப்படுவதன் முக்கிய நோக்கம் என்று வட மாகாண
ஆளுநர் கூறியுள்ளார்.
அத்துடன், வட மாகாணத்தில் வாழ்கின்ற பௌத்த மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை, பௌத்த கோட்பாடுகள் மற்றும் தர்மத்தின் ஊடாக எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது குறித்து, பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.வட மாகாணத்திலும் பார்வை பட தொடங்குகிறது. நம் உரிமைகளை பற்றிப்பிடிப்போம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக