அநுராதபுரம் தகயாகம பகுதியில் விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி, துப்பாக்கி ரவைகள் போன்றன மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் தகயாகம, ஜெயசிங்க பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை 4மணியளவில் மாநகரசபையினரால் வீதியோரங்களை
துப்பரவு செய்தபோது, வீதியோரத்திலுள்ள வடிகானில் பை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 46 துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
துப்பரவு செய்த மாநகரசபையினர் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அநுராதபுரம் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடமைகளை மீட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் எம்.பி.எம்.ஜி துப்பாக்கியினுடையதெனவும், விடுதலைப் புலிகளின் சின்னதுடனான தொப்பி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். மீட்கப்பட்ட ரவைகளும், தொப்பியும் புதிதாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக