சுவிஸ் தூதரக பெண் ஊழியர் (16.12.19) சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.கைது செய்யப்பட்ட குறித்த ஊழியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
அறிய முடிகின்றது.
கொழும்பில் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் ஊழியரை கைதுசெய்யுமாறு சி.ஐ.டி. என்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா
அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.பொய் சாட்சியம் வழங்கியமை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக
அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும் சட்டமா அதிபரின் இணைப்பதிகாரியுமான அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக